الغاشية
Al-Ghashiyah (The Overwhelming)
Meccan · 26 verses
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Reading settings
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَـٰشِيَةِ
Have you heard tell [Prophet] about the Overwhelming Event?
M.A.S. Abdel Haleem
(நபியே! அனைவரையும்) சூழ்ந்து கொள்ளக்கூடிய (மறுமையைப் பற்றிய) செய்தி உமக்குக் கிடைத்ததா?
Abdul Hameed Baqavi
وُجُوهٌ يَوْمَئِذٍ خَـٰشِعَةٌ
On that Day, there will be downcast faces,
M.A.S. Abdel Haleem
அந்நாளில், சில முகங்கள் இழிவடைந்து இருக்கும்.
Abdul Hameed Baqavi
عَامِلَةٌ نَّاصِبَةٌ
toiling and weary,
M.A.S. Abdel Haleem
அவை (தவறான வழியில்) அமல் செய்து (அதிலேயே) நிலைத்திருந்தவை.
Abdul Hameed Baqavi
تَصْلَىٰ نَارًا حَامِيَةً
as they enter the blazing Fire
M.A.S. Abdel Haleem
கொழுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கே அவை செல்லும்.
Abdul Hameed Baqavi
تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍ
and are forced to drink from a boiling spring,
M.A.S. Abdel Haleem
(அவை) கொதிக்கின்ற ஓர் ஊற்றிலிருந்து நீர் புகட்டப்படும்.
Abdul Hameed Baqavi
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ
with no food for them except bitter dry thorns
M.A.S. Abdel Haleem
அதில் அவர்களுக்கு(க் கருவேல) முட்களைத் தவிர, வேறொன்றும் உணவாகக் கிடைக்காது.
Abdul Hameed Baqavi
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍ
that neither nourish nor satisfy hunger.
M.A.S. Abdel Haleem
(அது அவர்களுடைய உடலைக்) கொழுக்கவும் வைக்காது; (அவர்களுடைய) பசியையும் தீர்த்து வைக்காது.
Abdul Hameed Baqavi
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ
On that Day there will also be faces radiant with bliss,
M.A.S. Abdel Haleem
எனினும், அந்நாளில் வேறு சில முகங்களோ, மிக்க செழிப்பாக இருக்கும்.
Abdul Hameed Baqavi
لِّسَعْيِهَا رَاضِيَةٌ
well pleased with their labour,
M.A.S. Abdel Haleem
(இம்மையில்) தாங்கள் செய்த (நல்ல) காரியங்களைப் பற்றித் திருப்தியடையும்.
Abdul Hameed Baqavi
فِى جَنَّةٍ عَالِيَةٍ
in a lofty garden,
M.A.S. Abdel Haleem
(அவை) மேலான சொர்க்கத்தில் இருக்கும்.
Abdul Hameed Baqavi
لَّا تَسْمَعُ فِيهَا لَـٰغِيَةً
where they will hear no idle talk,
M.A.S. Abdel Haleem
அதில் வீண் வார்த்தையை அவை செவியுறாது.
Abdul Hameed Baqavi
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ
with a flowing spring,
M.A.S. Abdel Haleem
அதில் (இவர்கள் அருந்துவதற்கு) தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்ற (தெளிவான) ஒரு சுனையுண்டு.
Abdul Hameed Baqavi
فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ
raised couches,
M.A.S. Abdel Haleem
அதில் (இவர்கள் அமருவதற்கு) உயர்ந்த இருக்கைகளுண்டு.
Abdul Hameed Baqavi
وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ
goblets placed before them,
M.A.S. Abdel Haleem
(பல வகை இன்பமான பானங்கள் நிறைந்த) கெண்டிகள் (இவர்கள் முன்) வைக்கப்பட்டிருக்கும்.
Abdul Hameed Baqavi
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ
cushions set in rows,
M.A.S. Abdel Haleem
(இவர்கள் சாய்ந்து கொள்வதற்காகத்) திண்டு தலையணைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்.
Abdul Hameed Baqavi
وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ
and carpets spread.
M.A.S. Abdel Haleem
உயர்ந்த விரிப்புகள் இவர்களின் கீழ் விரிக்கப்பட்டிருக்கும். (இத்தகைய சுகபோகத்தில் நல்லடியார்கள் இருப்பார்கள்.)
Abdul Hameed Baqavi
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
Do the disbelievers not see how rain clouds are formed 1
M.A.S. Abdel Haleem
(நபியே! இந்நிராகரிப்பவர்கள் தங்களிடமுள்ள) ஒட்டகத்தையேனும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது?
Abdul Hameed Baqavi
وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ
how the heavens are lifted,
M.A.S. Abdel Haleem
(அவர்களுக்கு மேல் உள்ள) வானத்தையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?
Abdul Hameed Baqavi
وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
how the mountains are raised high,
M.A.S. Abdel Haleem
(அவர்கள் கண்முன் தோன்றும்) மலைகளையும் அவர்கள் (கவனிக்க வேண்டாமா?) அவை எவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன?
Abdul Hameed Baqavi
وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ
how the earth is spread out?
M.A.S. Abdel Haleem
(அவர்கள் வசிக்கும்) பூமியையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது?
Abdul Hameed Baqavi
فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ
So [Prophet] warn them: your only task is to give warning,
M.A.S. Abdel Haleem
(ஆகவே, நபியே!) இவற்றை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்து, இவற்றைப் படைத்தவனின் அருள்களை, அவர்களுக்கு நீர் கூறி) நல்லுபதேசம் செய்வீராக! (இவற்றைக்கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறாவிடில் அதற்காக நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்,) நீர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்பவர்தான்,
Abdul Hameed Baqavi
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ
you are not there to control them.
M.A.S. Abdel Haleem
(அவ்வாறே நடக்கும்படி) அவர்களை நீர் நிர்ப்பந்திக்கக்கூடியவர் அல்ல.
Abdul Hameed Baqavi
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
As for those who turn away and disbelieve,
M.A.S. Abdel Haleem
எனினும், எவர்கள் புறக்கணித்து நிராகரிக்கிறார்களோ,
Abdul Hameed Baqavi
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ
God will inflict the greatest torment upon them.
M.A.S. Abdel Haleem
அவர்களை அல்லாஹ் பெரும் வேதனை செய்வான்.
Abdul Hameed Baqavi
إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ
It is to Us they will return,
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக அவர்கள் அனைவரும் நம்மிடம்தான் வர வேண்டும்.
Abdul Hameed Baqavi
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم
and then it is for Us to call them to account.
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்குக் கேட்பதும் நம் மீதுதான் கடமையாகும்.
Abdul Hameed Baqavi