النازعات
An-Nazi'at (Those who drag forth)
Meccan · 46 verses
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Reading settings
وَٱلنَّـٰزِعَـٰتِ غَرْقًا
By the forceful chargers
M.A.S. Abdel Haleem
(பாவிகளின் உயிர்களைப்) பலமாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக!
Abdul Hameed Baqavi
وَٱلنَّـٰشِطَـٰتِ نَشْطًا
raring to go,
M.A.S. Abdel Haleem
(நல்லவர்களின் ஆத்மாவை) எளிதாகக் கைப்பற்றுபவர்கள் மீது சத்தியமாக!
Abdul Hameed Baqavi
وَٱلسَّـٰبِحَـٰتِ سَبْحًا
sweeping ahead at full stretch,
M.A.S. Abdel Haleem
(ஆகாயத்திலும், கடலிலும்) அதிவேகமாக(ப் பறந்து) நீந்திச் செல்லும் வானவர்கள் மீது சத்தியமாக!
Abdul Hameed Baqavi
فَٱلسَّـٰبِقَـٰتِ سَبْقًا
overtaking swiftly
M.A.S. Abdel Haleem
(இறைவனின் கட்டளையை நிறைவேற்ற) போட்டி போட்டுக்கொண்டு முந்தி செல்பவர்கள் மீதும் சத்தியமாக!
Abdul Hameed Baqavi
فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًا
to bring the matter to an end,
M.A.S. Abdel Haleem
எல்லாக் காரியங்களையும் (இறைவனின் கட்டளைப்படி) நிர்வகிக்கின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக!
Abdul Hameed Baqavi
يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ
on the Day when the blast reverberates
M.A.S. Abdel Haleem
(கொடிய பூகம்பத்தால் பூமி) பலமாக அதிர்ச்சியுறும் நாளில்,
Abdul Hameed Baqavi
تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ
and the second blast follows,
M.A.S. Abdel Haleem
(மேலும்) அதைத் தொடர்ந்து (பல பூகம்ப அதிர்ச்சிகள்) வரும் (நாளில் உலகம் முடிவுற்றே தீரும்).
Abdul Hameed Baqavi
قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ
hearts will tremble
M.A.S. Abdel Haleem
அந்நாளில், உள்ளங்களெல்லாம் திடுக்கிட்டு நடுங்கிக் கொண்டிருக்கும்.
Abdul Hameed Baqavi
أَبْصَـٰرُهَا خَـٰشِعَةٌ
and eyes will be downcast.
M.A.S. Abdel Haleem
பார்வைகளெல்லாம் (பயத்தால்) கீழ்நோக்கி நிற்கும்.
Abdul Hameed Baqavi
يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ
They say, ‘What? shall we be brought back to life,
M.A.S. Abdel Haleem
(இவ்வாறிருக்க, நிராகரிப்பவர்கள் இதை மறுத்து) ‘‘நாம் (இறந்த பின்னர்) மெய்யாகவே நாம் (உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோமா?''
Abdul Hameed Baqavi
أَءِذَا كُنَّا عِظَـٰمًا نَّخِرَةً
after we have turned into decayed bones?’ and they say,
M.A.S. Abdel Haleem
(அதுவும்) நாம் உக்கி எலும்பாகப் போனதன் பின்னரா (உயிர் கொடுத்து எழுப்பப்படுவோம்?) என்று கூறுகின்றனர்.
Abdul Hameed Baqavi
قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ
‘Such a return is impossible!’
M.A.S. Abdel Haleem
‘‘அவ்வாறாயின், அது பெரும் நஷ்டமான மீட்சிதான் என்றும் அவர்கள் (பரிகாசமாகக்)'' கூறுகின்றனர்.
Abdul Hameed Baqavi
فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ
But all it will take is a single blast,
M.A.S. Abdel Haleem
(இது அவர்களுக்கு அசாத்தியமாகத் தோன்றலாம்; எனினும், நமக்கோ) அது ஓர் அதட்டல் (ஒரு உறுத்தல், ஒரு சப்தம்)தான்.
Abdul Hameed Baqavi
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
and they will be back above ground.
M.A.S. Abdel Haleem
உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்றெழுந்து) வந்து ஒரு திடலில் கூடிவிடுவார்கள்.
Abdul Hameed Baqavi
هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
Have you [Prophet] heard the story of Moses?
M.A.S. Abdel Haleem
(நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு எட்டியதா?
Abdul Hameed Baqavi
إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى
His Lord called out to him in the sacred valley of Tuwa:
M.A.S. Abdel Haleem
‘துவா' என்னும் பரிசுத்தமான ஓடைக்கு அவருடைய இறைவன் அவரை அழைத்ததை நினைவு கூறுங்கள்.
Abdul Hameed Baqavi
ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ
‘Go to Pharaoh, for he has exceeded all bounds,
M.A.S. Abdel Haleem
‘‘ஃபிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.
Abdul Hameed Baqavi
فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
and ask him, “Do you want to purify yourself [of sin]?
M.A.S. Abdel Haleem
(அவனிடம்) கூறுவீராக! ‘‘(பாவங்களை விட்டும்) நீ பரிசுத்தவானாக ஆக உனக்கு விருப்பம் தானா?
Abdul Hameed Baqavi
وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ
Do you want me to guide you to your Lord, so that you may hold Him in awe?” ’
M.A.S. Abdel Haleem
(அவ்வாறாயின்) உன் இறைவன் பக்கம் செல்லக்கூடிய வழியை நான் உனக்கு அறிவிக்கிறேன். அவனுக்கு நீ பயந்துகொள்'' (இவ்வாறு, மூஸாவுக்கு இறைவன் கட்டளையிட்டான்).
Abdul Hameed Baqavi
فَأَرَىٰهُ ٱلْـَٔايَةَ ٱلْكُبْرَىٰ
Moses showed him the great sign,
M.A.S. Abdel Haleem
(மூஸா அவனிடம் சென்று அவ்வாறு கூறிப்) பெரியதொரு அத்தாட்சியையும் அவனுக்குக் காண்பித்தார்.
Abdul Hameed Baqavi
فَكَذَّبَ وَعَصَىٰ
but he denied it and refused [the faith].
M.A.S. Abdel Haleem
(எனினும்) அவனோ, அதைப் பொய்யாக்கி (அவர் கூறியதற்கு) மாறு செய்தான்.
Abdul Hameed Baqavi
ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ
He turned away and hastily
M.A.S. Abdel Haleem
பின்னர் (அவரை விட்டும்) விலகி (அவருக்குத் தீங்கிழைக்கவும்) முயற்சி செய்தான்.
Abdul Hameed Baqavi
فَحَشَرَ فَنَادَىٰ
gathered his people, proclaiming,
M.A.S. Abdel Haleem
இதற்காக(த் தன் மக்களை) ஒன்று கூட்டி (அவர்களுக்கு) அறிக்கையிட்டான்.
Abdul Hameed Baqavi
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ
‘I am your supreme lord,’
M.A.S. Abdel Haleem
(அவர்களை நோக்கி) ‘‘நான்தான் உங்கள் மேலான இறைவன்'' என்று கூறினான்.
Abdul Hameed Baqavi
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْـَٔاخِرَةِ وَٱلْأُولَىٰٓ
so God condemned him to punishment in the life to come as well as in this life:
M.A.S. Abdel Haleem
ஆதலால், அல்லாஹ் அவனை இம்மை மறுமையின் வேதனையைக் கொண்டு பிடித்துக் கொண்டான்.
Abdul Hameed Baqavi
إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰٓ
there truly is a lesson in this for anyone who stands in awe of God.
M.A.S. Abdel Haleem
பயப்படுபவர்களுக்கு மெய்யாகவே இதில் ஒரு நல்ல படிப்பினை இருக்கிறது.
Abdul Hameed Baqavi
ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَا
Which is harder to create: you people or the sky that He built,
M.A.S. Abdel Haleem
(மனிதர்களே!) நீங்கள் பலமான படைப்பா? அல்லது வானமா? அவன்தான் அவ்வானத்தைப் படைத்தான்.
Abdul Hameed Baqavi
رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا
raising it high and perfecting it,
M.A.S. Abdel Haleem
அவனே அதன் முகட்டை உயர்த்தி, அதை ஒழுங்குபடுத்தினான்.
Abdul Hameed Baqavi
وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا
giving darkness to its night and bringing out its morning brightness,
M.A.S. Abdel Haleem
அவனே, அதன் இரவை இருளாக்கி(ச் சூரியனைக் கொண்டு) அதன் பகலை வெளியாக்கி (வெளிச்சமாக்கி)னான்.
Abdul Hameed Baqavi
وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
and the earth, too, He spread out,
M.A.S. Abdel Haleem
இதற்குப் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
Abdul Hameed Baqavi
أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا
bringing waters and pastures out of it,
M.A.S. Abdel Haleem
அவனே அதிலிருந்து நீரையும், மேய்ச்சல் பொருள்களையும் வெளியாக்குகிறான்.
Abdul Hameed Baqavi
وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا
and setting firm mountains [in it]
M.A.S. Abdel Haleem
மலைகளையும் அவனே (அதில்) உறுதியாக ஊன்றினான்.
Abdul Hameed Baqavi
مَتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ
for you and your animals to enjoy?
M.A.S. Abdel Haleem
உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிக்கக்கூடியவையாக (அவற்றை அதில் அமைத்தான்).
Abdul Hameed Baqavi
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ
When the great overwhelming event arrives
M.A.S. Abdel Haleem
(மறுமையின்) பெரும் அமளி வந்தால்,
Abdul Hameed Baqavi
يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ مَا سَعَىٰ
on the Day that man remembers what he has done
M.A.S. Abdel Haleem
மனிதன் செய்ததெல்லாம் அந்நாளில் அவனுடைய ஞாபகத்திற்கு வந்துவிடும்.
Abdul Hameed Baqavi
وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ
and Hell is there for all to see,
M.A.S. Abdel Haleem
மனிதர்கள் கண் முன் நரகம் கொண்டு வந்து வைக்கப்பட்டு விடும்.
Abdul Hameed Baqavi
فَأَمَّا مَن طَغَىٰ
for anyone who has transgressed
M.A.S. Abdel Haleem
எவன் வரம்பு மீறினானோ,
Abdul Hameed Baqavi
وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
and preferred the present life
M.A.S. Abdel Haleem
(மறுமையைப் புறக்கணித்து) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து கொண்டானோ,
Abdul Hameed Baqavi
فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ
Hell will be home;
M.A.S. Abdel Haleem
அவன் செல்லும் இடம் நிச்சயமாக நரகம்தான்.
Abdul Hameed Baqavi
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ
for anyone who feared the meeting with his Lord and restrained himself from base desires,
M.A.S. Abdel Haleem
எவன் தன் இறைவனின் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் (பற்றிப்) பயந்து, (தப்பான) சரீர இச்சையை விட்டுத் தன்னைத்தடுத்துக் கொண்டானோ,
Abdul Hameed Baqavi
فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ
Paradise will be home.
M.A.S. Abdel Haleem
அவன் செல்லுமிடம் நிச்சயமாக சொர்க்கம்தான்.
Abdul Hameed Baqavi
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا
They ask you [Prophet] about the Hour,
M.A.S. Abdel Haleem
(நபியே!) மறுமையைப் பற்றி, அது எப்பொழுது வருமென உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்.
Abdul Hameed Baqavi
فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ
saying, ‘When will it arrive?’, but how can you tell [them that]?
M.A.S. Abdel Haleem
(எப்பொழுது வருமென்று) எதற்காக நீர் கூற வேண்டும்?
Abdul Hameed Baqavi
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
Its time is known only to your Lord;
M.A.S. Abdel Haleem
அதன் முடிவெல்லாம், உமது இறைவனிடமே இருக்கிறது.
Abdul Hameed Baqavi
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا
you are only sent to warn those who fear it.
M.A.S. Abdel Haleem
அந்நாளைப் பற்றிப் பயப்படக்கூடியவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை. (அது வரும் காலத்தையும், நேரத்தையும் அறிவிப்பது உமது கடமையல்ல.)
Abdul Hameed Baqavi
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا
On the Day they see it, it will seem they lingered [in this life] an evening [at most,] or its morning.
M.A.S. Abdel Haleem
அதை அவர்கள் கண்ணால் காணும் நாளில், மாலையிலோ அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமே தவிர (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்றே அவர்களுக்குத் தோன்றும்.
Abdul Hameed Baqavi