النبإ

An-Naba (The Tidings)

Meccan · 40 verses

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

Reading settings
28
16

عَمَّ يَتَسَآءَلُونَ

What are they asking about?

M.A.S. Abdel Haleem

(நபியே!) எதைப்பற்றி அவர்கள் (தங்களுக்குள்) கேட்டுக் கொள்கின்றனர்?

Abdul Hameed Baqavi

عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ

The momentous announcement

M.A.S. Abdel Haleem

மகத்தான செய்தியைப் பற்றிய(ல்லவா)!

Abdul Hameed Baqavi

ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ

about which they differ.

M.A.S. Abdel Haleem

அதைப்பற்றி அவர்கள் (உண்மைக்கு) முரணான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர்.

Abdul Hameed Baqavi

كَلَّا سَيَعْلَمُونَ

They will find out.

M.A.S. Abdel Haleem

(தங்கள் எண்ணம் தவறு என்பதை) அதிசீக்கிரத்தில் அவர்கள் நன்கு அறிந்து கொள்வார்கள்.

Abdul Hameed Baqavi

ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ

In the end they will find out.

M.A.S. Abdel Haleem

பின்னர், அவசியம் அதிசீக்கிரத்தில் (அதன் உண்மையை) நன்கு அறிந்து கொள்வார்கள்.

Abdul Hameed Baqavi

أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَـٰدًا

Did We not make the earth smooth,

M.A.S. Abdel Haleem

(இவ்வளவு பெரிய) பூமியை நாம் (உங்களுக்கு) விரிப்பாக அமைக்க வில்லையா?

Abdul Hameed Baqavi

وَٱلْجِبَالَ أَوْتَادًا

and make the mountains to keep it stable?

M.A.S. Abdel Haleem

இன்னும், (அதில் நாம்) மலைகளை முளைகளாக (நிறுத்தவில்லையா?)

Abdul Hameed Baqavi

وَخَلَقْنَـٰكُمْ أَزْوَٰجًا

Did We not create you in pairs,

M.A.S. Abdel Haleem

ஜோடி ஜோடியாக உங்களை நாமே படைத்திருக்கிறோம்.

Abdul Hameed Baqavi

وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا

give you sleep for rest,

M.A.S. Abdel Haleem

நாமே உங்கள் நித்திரையை (உங்களுக்கு) ஓய்வாக ஆக்கினோம்.

Abdul Hameed Baqavi

وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًا

the night as a cover,

M.A.S. Abdel Haleem

நாமே இரவை (உங்களுக்கு)ப் போர்வையாக ஆக்கினோம்.

Abdul Hameed Baqavi

وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًا

and the day for your livelihood?

M.A.S. Abdel Haleem

நாமே பகலை (உங்கள்) வாழ்வைத் தேடிக்கொள்ளும் நேரமாக்கினோம்.

Abdul Hameed Baqavi

وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا

Did We not build seven strong [heavens] above you,

M.A.S. Abdel Haleem

உங்களுக்கு மேலிருக்கும் பலமான ஏழு வானங்களையும் நாமே அமைத்தோம்.

Abdul Hameed Baqavi

وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا

and make a blazing lamp?

M.A.S. Abdel Haleem

அதில் (சூரியனைப்) பிரகாசிக்கும் தீபமாக அமைத்தோம்.

Abdul Hameed Baqavi

وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا

Did We not send water pouring down from the clouds

M.A.S. Abdel Haleem

கார்மேகத்திலிருந்து பெரும் மழையை பொழியச் செய்கிறோம்.

Abdul Hameed Baqavi

لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا

to bring forth with it grain, plants,

M.A.S. Abdel Haleem

அதைக் கொண்டு தானியங்களையும் புற்பூண்டுகளையும் முளைப்பிக்கிறோம்.

Abdul Hameed Baqavi

وَجَنَّـٰتٍ أَلْفَافًا

and luxuriant gardens?

M.A.S. Abdel Haleem

இன்னும், கிளைகள் அடர்ந்த சோலைகளையும் (உற்பத்தி செய்கிறோம்).

Abdul Hameed Baqavi

إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَـٰتًا

A time has been appointed for the Day of Decision:

M.A.S. Abdel Haleem

நிச்சயமாக (இவர்கள் தர்க்கித்து நிராகரித்துக் கொண்டிருக்கும்) அந்தத் தீர்ப்பு நாள்தான் (விசாரணைக்குக்) குறிப்பிட்ட காலமாகும்.

Abdul Hameed Baqavi

يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا

a Day when the Trumpet will sound and you will come forward in crowds,

M.A.S. Abdel Haleem

(அதற்காக) ஸூர் (என்னும் எக்காளம்) ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்.

Abdul Hameed Baqavi

وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًا

when the sky will open up like wide portals,

M.A.S. Abdel Haleem

வானம் திறக்கப்பட்டு (அதில்) பல வழிகள் ஏற்பட்டு விடும்.

Abdul Hameed Baqavi

وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا

when the mountains will vanish like a mirage.

M.A.S. Abdel Haleem

மலைகள் (தம் இடத்திலிருந்து) பெயர்க்கப்பட்டு தூள்தூளாகி (பறந்து) விடும்.

Abdul Hameed Baqavi

إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا

Hell lies in wait,

M.A.S. Abdel Haleem

நிச்சயமாக நரகம் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

Abdul Hameed Baqavi

لِّلطَّـٰغِينَ مَـَٔابًا

a home for oppressors

M.A.S. Abdel Haleem

(பாவிகளாகிய) இந்த அநியாயக்காரர்கள் தங்குமிடம் அதுவே.

Abdul Hameed Baqavi

لَّـٰبِثِينَ فِيهَآ أَحْقَابًا

to stay in for a long, long time,

M.A.S. Abdel Haleem

அதில் அவர்கள் நீண்ட காலங்கள் தங்கிவிடுவார்கள்.

Abdul Hameed Baqavi

لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا

where they will taste no coolness nor drink

M.A.S. Abdel Haleem

25. அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தையும் தவிர அவர்கள் (வேறு ஒரு) குடிபானத்தையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்.

Abdul Hameed Baqavi

إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا

except one that is scalding and dark––

M.A.S. Abdel Haleem

25. அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தையும் தவிர அவர்கள் (வேறு ஒரு) குடிபானத்தையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்.

Abdul Hameed Baqavi

جَزَآءً وِفَاقًا

a fitting requital,

M.A.S. Abdel Haleem

இது (அவர்கள் செயலுக்குத்) தகுமான கூலியாகும்.

Abdul Hameed Baqavi

إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًا

for they did not fear a reckoning,

M.A.S. Abdel Haleem

ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் (மறுமையின்) கேள்வி கணக்கை நம்பவே இல்லை.

Abdul Hameed Baqavi

وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا كِذَّابًا

and they rejected Our messages as lies.

M.A.S. Abdel Haleem

அவர்கள் நம் வசனங்களை மிக அலட்சியமாகப் பொய்ப்பித்தார்கள்.

Abdul Hameed Baqavi

وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَـٰهُ كِتَـٰبًا

We have recorded everything in a Record.

M.A.S. Abdel Haleem

எனினும், இவை அனைத்தையும் நாம் (நம் குறிப்புப்) புத்தகத்தில் பதிவு செய்து கொண்டோம்.

Abdul Hameed Baqavi

فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا

‘Taste this: all you will get from Us is more torment.’

M.A.S. Abdel Haleem

ஆகவே, (மறுமையில் அவர்களை நோக்கி) ‘‘வேதனையைத் தவிர நாம் உங்களுக்கு (வேறெதையும்) அதிகப்படுத்த மாட்டோம். ஆகவே, (இதைச்) சுவைத்துப் பாருங்கள்'' (என்று கூறுவோம்).

Abdul Hameed Baqavi

إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا

For those who were aware of God there is supreme fulfilment:

M.A.S. Abdel Haleem

(ஆயினும்), இறையச்சமுடையவர்களுக்கோ நிச்சயமாக பாதுகாப்பான (சொர்க்கம் என்னும்) இடம் உண்டு.

Abdul Hameed Baqavi

حَدَآئِقَ وَأَعْنَـٰبًا

private gardens, vineyards,

M.A.S. Abdel Haleem

(அங்கு வசிப்பதற்கு) தோட்டங்களும் (அவற்றில் புசிப்பதற்கு அவர்களுக்கு) திராட்சைக் கனிகளும் உண்டு.

Abdul Hameed Baqavi

وَكَوَاعِبَ أَتْرَابًا

nubile, well-matched companions,

M.A.S. Abdel Haleem

(மனைவிகளாக) ஒரே வயதுடைய (கண்ணழகிகளான) நெஞ்சு நிமிர்ந்த கன்னிகளும்,

Abdul Hameed Baqavi

وَكَأْسًا دِهَاقًا

and an overflowing cup.

M.A.S. Abdel Haleem

(பானங்கள்) நிறைந்த கிண்ணங்களும் (அவர்களுக்குக் கிடைக்கும்).

Abdul Hameed Baqavi

لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّٰبًا

There they will hear no vain or lying talk:

M.A.S. Abdel Haleem

அங்கு அவர்கள் வீண் வார்த்தையையும் பொய்யையும் செவியுற மாட்டார்கள்.

Abdul Hameed Baqavi

جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا

a reward from your Lord, a fitting gift

M.A.S. Abdel Haleem

(இவையெல்லாம் இவர்களின் நன்மைகளுக்குக்) கணக்கான கூலியாகவும் (கிடைக்கும். அதற்கு மேல்) உமது இறைவன் புறத்தால் நன்கொடையாகவும் (இன்னும் அதிகம்) அவர்களுக்குக் கிடைக்கும்.

Abdul Hameed Baqavi

رَّبِّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَـٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا

from the Lord of the heavens and earth and everything between, the Lord of Mercy. They will have no authority from Him to speak.

M.A.S. Abdel Haleem

அவனே வானங்கள், பூமி, இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் உரிமையாளனும் அளவற்ற அருளாளனும் ஆவான். எனினும், (அந்நாளில் எவருமே) அவன் முன் பேச சக்தி பெறமாட்டார்கள்.

Abdul Hameed Baqavi

يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَـٰٓئِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَـٰنُ وَقَالَ صَوَابًا

On the Day when the Spirit and the angels stand in rows, they will not speak except for those to whom the Lord of Mercy gives permission, who will say only what is right.

M.A.S. Abdel Haleem

ஜிப்ரயீலும், வானவர்களும் அணி அணியாக நிற்கும் அந்நாளில், எவருமே அவன் முன் பேச (சக்தி பெற) மாட்டார்கள். எனினும், ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுத்து ‘‘சரி! பேசுவீராக!'' எனவும் கூறினானோ அவர் (மட்டும்) பேசுவார்.

Abdul Hameed Baqavi

ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا

That is the Day of Truth. So whoever wishes to do so should take the path that leads to his Lord.

M.A.S. Abdel Haleem

இத்தகைய நாள் (வருவது) உறுதி! ஆகவே, விரும்பியவன் தன் இறைவனிடமே தங்கும் இடத்தைத் தேடிக்கொள்ளவும்.

Abdul Hameed Baqavi

إِنَّآ أَنذَرْنَـٰكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَـٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا

We have warned you of imminent torment, on the Day when every person will see what their own hands have sent ahead for them, when the disbeliever will say, ‘If only I were dust!’

M.A.S. Abdel Haleem

சமீபத்தில் நிச்சயமாக உங்களுக்கு வரக்கூடிய ஒரு வேதனையைப் பற்றி நாம் எச்சரிக்கை செய்கிறோம். அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தன் கரங்கள் செய்த செயலின் பலனை(த் தன் கண்ணால்) கண்டுகொள்வான். நிராகரிப்பவனோ தான் மண்ணாக ஆகவேண்டுமே என்று புலம்புவான்!

Abdul Hameed Baqavi

An-Naba (The Tidings) · 40 verses