النجم
An-Najm (The Star)
Meccan · 62 verses
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Reading settings
وَٱلنَّجْمِ إِذَا هَوَىٰ
By the star when it sets!
M.A.S. Abdel Haleem
விழுந்து மறையும் நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
Abdul Hameed Baqavi
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ
Your companion has not strayed; he is not deluded;
M.A.S. Abdel Haleem
(நம் தூதராகிய) உங்கள் தோழர் வழி தவறி விடவுமில்லை; தவறான வழியில் செல்லவுமில்லை.
Abdul Hameed Baqavi
وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰٓ
he does not speak from his own desire.
M.A.S. Abdel Haleem
அவர் தன் விருப்பப்படி எதையும் கூறுவதில்லை.
Abdul Hameed Baqavi
إِنْ هُوَ إِلَّا وَحْىٌ يُوحَىٰ
The Quran is nothing less than a revelation that is sent to him.
M.A.S. Abdel Haleem
இது அவருக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டதே தவிர (வேறு) இல்லை.
Abdul Hameed Baqavi
عَلَّمَهُۥ شَدِيدُ ٱلْقُوَىٰ
It was taught to him by [an angel] with mighty powers
M.A.S. Abdel Haleem
(ஜிப்ரயீல் என்னும்) வலுவான ஆற்றலுடையவர் இதை அவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்.
Abdul Hameed Baqavi
ذُو مِرَّةٍ فَٱسْتَوَىٰ
and great strength, who stood
M.A.S. Abdel Haleem
அவர் மிக்க ஆத்ம சக்தியுடையவர். அவர் (தன் இயற்கை ரூபத்தில் நபி முன்) தோன்றினார்.
Abdul Hameed Baqavi
وَهُوَ بِٱلْأُفُقِ ٱلْأَعْلَىٰ
on the highest horizon
M.A.S. Abdel Haleem
அவர் உயர்ந்த (வானத்தின்) கடைக்கோடியில் இருந்தார்.
Abdul Hameed Baqavi
ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ
and then approached––coming down
M.A.S. Abdel Haleem
இன்னும் நெருங்கினார், (அவர் முன்) இறங்கினார்.
Abdul Hameed Baqavi
فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ
until he was two bow-lengths away or even closer––
M.A.S. Abdel Haleem
(சேர்ந்த) இரு வில்களைப்போல், அல்லது அதைவிட சமீபமாக அவர் நெருங்கினார்.
Abdul Hameed Baqavi
فَأَوْحَىٰٓ إِلَىٰ عَبْدِهِۦ مَآ أَوْحَىٰ
and revealed to God’s servant what He revealed.
M.A.S. Abdel Haleem
(அல்லாஹ்) அவருக்கு (வஹ்யி மூலம்) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய (நபியாகிய) அடியாருக்கு அறிவித்தார்.
Abdul Hameed Baqavi
مَا كَذَبَ ٱلْفُؤَادُ مَا رَأَىٰٓ
[The Prophet’s] own heart did not distort what he saw.
M.A.S. Abdel Haleem
(நபியுடைய) உள்ளம், தான் கண்டதைப் பற்றிப் பொய் கூறவில்லை.
Abdul Hameed Baqavi
أَفَتُمَـٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ
Are you going to dispute with him what he saw with his own eyes?
M.A.S. Abdel Haleem
அவர் கண்டதைப் பற்றி நீங்கள் (சந்தேகித்து) அவருடன் தர்க்கிக்கிறீர்களா?
Abdul Hameed Baqavi
وَلَقَدْ رَءَاهُ نَزْلَةً أُخْرَىٰ
A second time he saw him:
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக அவர், மற்றொரு முறையும் (தன்னிடத்தில் ஜிப்ரயீலாகிய) அவர் இறங்கக் கண்டிருக்கிறார்.
Abdul Hameed Baqavi
عِندَ سِدْرَةِ ٱلْمُنتَهَىٰ
by the lote tree beyond which none may pass
M.A.S. Abdel Haleem
‘‘ஸித்ரத்துல் முன்தஹா' என்னும் (இலந்தை) மரத்தின் சமீபத்தில்.
Abdul Hameed Baqavi
عِندَهَا جَنَّةُ ٱلْمَأْوَىٰٓ
near the Garden of Restfulness,
M.A.S. Abdel Haleem
அதன் சமீபத்தில்தான் (நல்லடியார்கள்) தங்கும் சொர்க்கம் இருக்கிறது.
Abdul Hameed Baqavi
إِذْ يَغْشَى ٱلسِّدْرَةَ مَا يَغْشَىٰ
when the tree was covered in nameless [splendour].
M.A.S. Abdel Haleem
அந்த மரத்தை மூடியிருந்தவை அதை முற்றிலும் மூடிக்கொண்டன.
Abdul Hameed Baqavi
مَا زَاغَ ٱلْبَصَرُ وَمَا طَغَىٰ
His sight never wavered, nor was it too bold,
M.A.S. Abdel Haleem
(அதிலிருந்து அவருடைய) பார்வை விலகவும் இல்லை; கடக்கவும் இல்லை!
Abdul Hameed Baqavi
لَقَدْ رَأَىٰ مِنْ ءَايَـٰتِ رَبِّهِ ٱلْكُبْرَىٰٓ
and he saw some of the greatest signs of his Lord.
M.A.S. Abdel Haleem
அவர் தன் இறைவனின் மிகப்பெரிய அத்தாட்சிகளையெல்லாம் மெய்யாகவே கண்டார்.
Abdul Hameed Baqavi
أَفَرَءَيْتُمُ ٱللَّـٰتَ وَٱلْعُزَّىٰ
[Disbelievers], consider al-Lat and al-Uzza,
M.A.S. Abdel Haleem
(நீங்கள் ஆராதனை செய்யும்) லாத், உஜ்ஜா (என்னும் சிலை)களை நீங்கள் கவனித்தீர்களா?
Abdul Hameed Baqavi
وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلْأُخْرَىٰٓ
and the third one, Manat––
M.A.S. Abdel Haleem
மற்றொரு மூன்றாவது மனாத் (என்னும் சிலையைப்) பற்றியும் நீங்கள் சிந்தித்தீர்களா? (அவற்றுக்கு ஏதேனும் இத்தகைய சக்தி உண்டா?)
Abdul Hameed Baqavi
أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلْأُنثَىٰ
are you to have the male and He the female?
M.A.S. Abdel Haleem
என்னே! உங்களுக்கு ஆண் மக்கள், அவனுக்குப் பெண் மக்களா?
Abdul Hameed Baqavi
تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰٓ
That would be a most unjust distribution!––
M.A.S. Abdel Haleem
அவ்வாறாயின், அது மிக்க அநியாயமான பங்கீடாகும்.
Abdul Hameed Baqavi
إِنْ هِىَ إِلَّآ أَسْمَآءٌ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَـٰنٍ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهْوَى ٱلْأَنفُسُ ۖ وَلَقَدْ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلْهُدَىٰٓ
these are nothing but names you have invented yourselves, you and your forefathers. God has sent no authority for them. These people merely follow guesswork and the whims of their souls, even though guidance has come to them from their Lord.
M.A.S. Abdel Haleem
இவையெல்லாம் நீங்களும், உங்கள் மூதாதைகளும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்களே தவிர (அவை வணங்கத் தகுதியானவை) இல்லை. அ(வை வணங்கத் தகுதியானவை என்ப)தற்காக அல்லாஹ் உங்களுக்கு எந்த ஆதாரத்தையும் (முந்திய வேதங்களிலும்) இறக்கிவைக்கவில்லை. அவர்கள் (தங்கள்) மன இச்சைகளையும் வீண் சந்தேகத்தையும் தவிர, (இறை வேதத்தை பின்பற்றுவது) இல்லை. நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு நேரான வழி (இந்த குர்ஆன்) வந்தே இருக்கிறது. (எனினும், அதை அவர்கள் பின்பற்றுவதில்லை.)
Abdul Hameed Baqavi
أَمْ لِلْإِنسَـٰنِ مَا تَمَنَّىٰ
Is man to have everything he wishes for,
M.A.S. Abdel Haleem
மனிதன் விரும்பியதெல்லாம் அவனுக்குக் கிடைத்துவிடுமா?
Abdul Hameed Baqavi
فَلِلَّهِ ٱلْـَٔاخِرَةُ وَٱلْأُولَىٰ
when the present life and the life to come belong only to God?
M.A.S. Abdel Haleem
(ஏனென்றால்) இம்மையும் மறுமையும் அல்லாஹ்வுக்குறியனவே! (அவன் விரும்பியவர்களுக்கே அவற்றின் பாக்கியத்தை அளிப்பான்.)
Abdul Hameed Baqavi
۞ وَكَم مِّن مَّلَكٍ فِى ٱلسَّمَـٰوَٰتِ لَا تُغْنِى شَفَـٰعَتُهُمْ شَيْـًٔا إِلَّا مِنۢ بَعْدِ أَن يَأْذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرْضَىٰٓ
There are many angels in heaven whose intercession will be of no use until God gives permission to those He will, whose words He will accept.
M.A.S. Abdel Haleem
வானத்தில் எத்தனையோ வானவர்கள் இருக்கின்றனர். (எவருக்காகவும்)அவர்கள் பரிந்து பேசுவது ஒரு பயனும் அளிக்காது. ஆயினும், அல்லாஹ் விரும்பி, எவரைப் பற்றித் திருப்தியடைந்து (அவருக்காக) அவன் அனுமதி கொடுக்கிறானோ அவருக்கே தவிர (மற்றவருக்கு பயனளிக்காது).
Abdul Hameed Baqavi
إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ لَيُسَمُّونَ ٱلْمَلَـٰٓئِكَةَ تَسْمِيَةَ ٱلْأُنثَىٰ
Those who deny the life to come give the angels female names.
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்கள் வானவர்களுக்குப் பெண்களின் பெயர்களை சூட்டுகின்றனர்.
Abdul Hameed Baqavi
وَمَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ ۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ ۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغْنِى مِنَ ٱلْحَقِّ شَيْـًٔا
They have no knowledge to base this on: they merely follow guesswork. Guesswork is of no value against the Truth.
M.A.S. Abdel Haleem
இதைப் பற்றி அவர்களுக்கு ஒரு ஞானமும் கிடையாது. (ஆதாரமற்ற) வீண் சந்தேகத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் பின்பற்றுவதில்லை. வீண் சந்தேகம் எதையும் உறுதிப்படுத்தாது.
Abdul Hameed Baqavi
فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
So [Prophet] ignore those who turn away from Our revelation, who want only the life of this world.
M.A.S. Abdel Haleem
(நபியே!) எவன் என்னைத் தியானிக்காது விலகி, இவ்வுலக வாழ்க்கையைத் தவிர, (மறுமையை) விரும்பாதிருக்கிறானோ, அவனை நீர் புறக்கணித்து விடுவீராக.
Abdul Hameed Baqavi
ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ ٱلْعِلْمِ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِمَنِ ٱهْتَدَىٰ
Their knowledge does not go beyond that. Your Lord knows best who strays from His path and who follows guidance.
M.A.S. Abdel Haleem
இவர்களுடைய கல்வி ஞானம் இவ்வளவு தூரம்தான் செல்கிறது (இதற்கு மேல் செல்வதில்லை.) நிச்சயமாக உமது இறைவன், தன் வழியிலிருந்து தவறியவன் யாரென்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவன் யாரென்பதையும் அவன் நன்கறிவான்.
Abdul Hameed Baqavi
وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ لِيَجْزِىَ ٱلَّذِينَ أَسَـٰٓـُٔوا۟ بِمَا عَمِلُوا۟ وَيَجْزِىَ ٱلَّذِينَ أَحْسَنُوا۟ بِٱلْحُسْنَى
Everything in the heavens and earth belongs to God. He will repay those who do evil according to their deeds, and reward, with what is best, those who do good.
M.A.S. Abdel Haleem
வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே. ஆகவே, தீமை செய்தவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயலுக்குத் தக்கவாறு (தீமையைக்) கூலியாகக் கொடுக்கிறான். நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கிறான்.
Abdul Hameed Baqavi
ٱلَّذِينَ يَجْتَنِبُونَ كَبَـٰٓئِرَ ٱلْإِثْمِ وَٱلْفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ فِى بُطُونِ أُمَّهَـٰتِكُمْ ۖ فَلَا تُزَكُّوٓا۟ أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ
As for those who avoid grave sins and foul acts, though they may commit small sins, your Lord is ample in forgiveness. He has been aware of you from the time He produced you from the earth and from your hiding places in your mothers’ wombs, so do not assert your own goodness:He knows best who is mindful of Him.
M.A.S. Abdel Haleem
(நன்மை செய்யும்) அவர்கள் (ஏதும் தவறாக ஏற்பட்டுவிடும்) அற்பமான பாவங்களைத் தவிர, மற்ற பெரும்பாவங்களிலிருந்தும், மானக்கேடான விஷயங்களிலிருந்தும் விலகியிருப்பார்கள். நிச்சயமாக உமது இறைவன் மன்னிப்பதில் மிக்க தாராளமானவன். உங்களைப் பூமியிலிருந்து உற்பத்தி செய்த சமயத்தில் (உங்கள் தன்மையை) அவன் நன்கறிவான். நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் கர்ப்பப்பிண்டமாயிருந்த சமயத்திலும் உங்களை அவன் நன்கறிவான். ஆகவே, ‘‘தூய்மையானவர்கள்' என உங்களை நீங்களே தற்புகழ்ச்சி செய்துகொள்ளாதீர்கள். உங்களில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்பவர்கள் யாரென்பதை அவன் நன்கறிவான்.
Abdul Hameed Baqavi
أَفَرَءَيْتَ ٱلَّذِى تَوَلَّىٰ
[Prophet], consider that man who turned away:
M.A.S. Abdel Haleem
(நபியே!) உம்மை விட்டும் விலகியவனை நீர் கவனித்தீரா?
Abdul Hameed Baqavi
وَأَعْطَىٰ قَلِيلًا وَأَكْدَىٰٓ
he only gave a little and then he stopped.
M.A.S. Abdel Haleem
அவன் ஒரு சொற்பத்தை தர்மம் கொடுத்துவிட்டு, கொடுப்பதையே (முற்றிலும்) நிறுத்திக் கொண்டான்.
Abdul Hameed Baqavi
أَعِندَهُۥ عِلْمُ ٱلْغَيْبِ فَهُوَ يَرَىٰٓ
Does he have knowledge of the Unseen? Can he see [the Hereafter]?
M.A.S. Abdel Haleem
அவனிடத்தில் மறைவான விஷயத்தின் ஞானமிருந்து (தன் முடிவை அதில்) அவன் பார்த்தானா?
Abdul Hameed Baqavi
أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِى صُحُفِ مُوسَىٰ
Has he not been told what was written in the Scriptures of Moses
M.A.S. Abdel Haleem
அல்லது மூஸாவுடைய வேதத்திலுள்ளவை அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?
Abdul Hameed Baqavi
وَإِبْرَٰهِيمَ ٱلَّذِى وَفَّىٰٓ
and of Abraham, who fulfilled his duty:
M.A.S. Abdel Haleem
(அல்லது இறைவனுடைய கட்டளைகளை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமுடைய விஷயமேனும் (அவனுக்குத் தெரியாதா?)
Abdul Hameed Baqavi
أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ
that no soul shall bear the burden of another;
M.A.S. Abdel Haleem
(நபியே!) அறிந்து கொள்வீராக! ஒருவனின் பாவச் சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான்
Abdul Hameed Baqavi
وَأَن لَّيْسَ لِلْإِنسَـٰنِ إِلَّا مَا سَعَىٰ
that man will only have what he has worked towards;
M.A.S. Abdel Haleem
‘‘இன்னும் நிச்சயமாக மனிதனுக்கு அவன் செய்த செயலைத் தவிர வேறொன்றும் கிடைக்காது.''
Abdul Hameed Baqavi
وَأَنَّ سَعْيَهُۥ سَوْفَ يُرَىٰ
that his labour will be seen
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக (மனிதன் செய்த) செயல்தான் கவனிக்கப்படும்.
Abdul Hameed Baqavi
ثُمَّ يُجْزَىٰهُ ٱلْجَزَآءَ ٱلْأَوْفَىٰ
and that in the end he will be repaid in full for it;
M.A.S. Abdel Haleem
பின்னர், செயலுக்குத் தக்க கூலி முழுமையாகக் கொடுக்கப்படுவான்.
Abdul Hameed Baqavi
وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلْمُنتَهَىٰ
that the final goal is your Lord;
M.A.S. Abdel Haleem
(நபியே!) நிச்சயமாக உமது இறைவனிடம்தான் (உங்கள் அனைவரின்) இறுதி இடம் இருக்கிறது.
Abdul Hameed Baqavi
وَأَنَّهُۥ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ
that it is He who makes people laugh and weep;
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கிறான்; அழவும் வைக்கிறான்.
Abdul Hameed Baqavi
وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحْيَا
that it is He who gives death and life;
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக அவன்தான் மரணிக்க வைக்கிறான்; (திரும்பவும்) உயிர்ப்பிக்கிறான்.
Abdul Hameed Baqavi
وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰ
that He Himself created the two sexes, male and female,
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக அவன்தான் ஆண், பெண் ஜோடிகளாகப் படைக்கிறான்.
Abdul Hameed Baqavi
مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ
from an ejected drop of sperm;
M.A.S. Abdel Haleem
(கர்ப்பத்தில்) செலுத்தப்படும் ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டே (உங்களைப் படைக்கிறான்).
Abdul Hameed Baqavi
وَأَنَّ عَلَيْهِ ٱلنَّشْأَةَ ٱلْأُخْرَىٰ
that He will undertake the second Creation;
M.A.S. Abdel Haleem
நிச்சயமாக (நீங்கள் மரணித்தப் பின்னர் உங்களை) மறுமுறை உயிர் கொடுத்து எழுப்புவதும் அவன் மீது கடமையாக இருக்கிறது.
Abdul Hameed Baqavi
وَأَنَّهُۥ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ
that it is He who gives wealth and possessions;
M.A.S. Abdel Haleem
பொருளைக் கொடுத்து (அதை நீங்கள்) சேகரித்துச் சீமானாகும்படி செய்பவனும் நிச்சயமாக அவன்தான்.
Abdul Hameed Baqavi
وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعْرَىٰ
that He is the Lord of Sirius;
M.A.S. Abdel Haleem
(இணைவைப்பவர்களே! நீங்கள் வணங்கும்) ‘ஷிஃரா' என்னும் நட்சத்திரத்தின் இறைவனும் நிச்சயமாக அவன்தான்.
Abdul Hameed Baqavi
وَأَنَّهُۥٓ أَهْلَكَ عَادًا ٱلْأُولَىٰ
that it was He who destroyed, in their entirety, ancient 'Ad
M.A.S. Abdel Haleem
(அந்த நட்சத்திரத்தை வணங்கிக் கொண்டிருந்த) முந்திய ஆது என்னும் மக்களை அழித்தவனும் நிச்சயமாக அவன்தான்.
Abdul Hameed Baqavi
وَثَمُودَا۟ فَمَآ أَبْقَىٰ
and Thamud,
M.A.S. Abdel Haleem
ஸமூத் என்னும் மக்களையும் (அழித்தவன் அவன்தான். அவர்களில் ஒருவரையுமே) அவன் தப்பவிடவில்லை.
Abdul Hameed Baqavi
وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا۟ هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ
and before them the people of Noah who were even more unjust and insolent;
M.A.S. Abdel Haleem
இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுடைய மக்களையும் (அழித்தவன் அவன்தான்). நிச்சயமாக இவர்கள் (அனைவரும்) அநியாயக்காரர்களாகவும், வரம்பு மீறியவர்களாகவும் இருந்தனர்.
Abdul Hameed Baqavi
وَٱلْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ
that it was He who brought down the ruined cities
M.A.S. Abdel Haleem
(லூத்தின் மக்களுடைய) கவிழ்ந்துபோன பட்டிணங்களைப் புரட்டி அடித்தவனும் அவன்தான்.
Abdul Hameed Baqavi
فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ
and enveloped them in the punishment He ordained for them?
M.A.S. Abdel Haleem
(அவர்கள் அழிவுற்ற நேரத்தில்) அவர்களைச் சூழ்ந்துகொள்ள வேண்டிய (வேதனையான)து முற்றிலும் அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
Abdul Hameed Baqavi
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ
Which then of your Lord’s blessings do you deny?
M.A.S. Abdel Haleem
ஆகவே, (மனிதனே! நீ) உனது இறைவனின் கொடைகளில் எதைத் தான் சந்தேகிக்கிறாய்?
Abdul Hameed Baqavi
هَـٰذَا نَذِيرٌ مِّنَ ٱلنُّذُرِ ٱلْأُولَىٰٓ
This is a warning just like the warnings sent in former times.
M.A.S. Abdel Haleem
முன்னர் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்த தூதர்களைப் போல் இவரும் ஒரு தூதரே!
Abdul Hameed Baqavi
أَزِفَتِ ٱلْـَٔازِفَةُ
The imminent Hour draws near
M.A.S. Abdel Haleem
தீவிரமாக வரவேண்டிய (உலக முடிவு) காலம் நெருங்கி விட்டது.
Abdul Hameed Baqavi
لَيْسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ
and only God can disclose it.
M.A.S. Abdel Haleem
அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதைத் தடுக்க முடியாது.
Abdul Hameed Baqavi
أَفَمِنْ هَـٰذَا ٱلْحَدِيثِ تَعْجَبُونَ
Do you [people] marvel at this?
M.A.S. Abdel Haleem
இதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?
Abdul Hameed Baqavi
وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ
Why do you laugh instead of weeping?
M.A.S. Abdel Haleem
(இதைப் பற்றி) நீங்கள் சிரிக்கிறீர்களே? அழ வேண்டாமா?
Abdul Hameed Baqavi
وَأَنتُمْ سَـٰمِدُونَ
Why do you pay no heed?
M.A.S. Abdel Haleem
(இதைப் பற்றி) நீங்கள் கவலையற்று இருக்கிறீர்களே!
Abdul Hameed Baqavi
فَٱسْجُدُوا۟ لِلَّهِ وَٱعْبُدُوا۟ ۩
Bow down before God and worship.
M.A.S. Abdel Haleem
ஆகவே, (அவ்வாறு இருக்காமல்) அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து (அவன் ஒருவனையே) வணங்குவீர்களாக!
Abdul Hameed Baqavi