المؤمنون

Al-Mu'minun (The Believers)

Meccan · 118 verses

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

Reading settings
28
16

قَدْ أَفْلَحَ ٱلْمُؤْمِنُونَ

[How] prosperous are the believers!

M.A.S. Abdel Haleem

நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டனர்.

Abdul Hameed Baqavi

ٱلَّذِينَ هُمْ فِى صَلَاتِهِمْ خَـٰشِعُونَ

Those who pray humbly,

M.A.S. Abdel Haleem

அவர்கள் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள்;

Abdul Hameed Baqavi

وَٱلَّذِينَ هُمْ عَنِ ٱللَّغْوِ مُعْرِضُونَ

who shun idle talk,

M.A.S. Abdel Haleem

அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகி இருப்பார்கள்;

Abdul Hameed Baqavi

وَٱلَّذِينَ هُمْ لِلزَّكَوٰةِ فَـٰعِلُونَ

who pay the prescribed alms,

M.A.S. Abdel Haleem

அவர்கள் ஜகாத்து கொடுத்து வருவார்கள்;

Abdul Hameed Baqavi

وَٱلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَـٰفِظُونَ

who guard their chastity

M.A.S. Abdel Haleem

அவர்கள் தங்கள் மர்மஸ்தானத்தை (விபசாரத்திலிருந்து) காப்பாற்றிக் கொள்வார்கள்;

Abdul Hameed Baqavi

إِلَّا عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَـٰنُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ

except with their spouses or their slaves––with these they are not to blame,

M.A.S. Abdel Haleem

எனினும், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலது கரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே, இவ்விஷயத்தில்) அவர்கள் பழிக்கப்பட மாட்டார்கள்.

Abdul Hameed Baqavi

فَمَنِ ٱبْتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْعَادُونَ

but anyone who seeks more than this is exceeding the limits––

M.A.S. Abdel Haleem

இதற்குப் புறம்பானதை எவரேனும் விரும்பினால் அவர்கள் வரம்பு மீறியவர்களாகி (குற்றவாளிகளாகி) விடுவார்கள்.

Abdul Hameed Baqavi

وَٱلَّذِينَ هُمْ لِأَمَـٰنَـٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَ

who are faithful to their trusts and pledges

M.A.S. Abdel Haleem

மேலும், அவர்கள் (தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருளையும், தங்கள் வாக்குறுதியையும் பேணி நடப்பார்கள்;

Abdul Hameed Baqavi

وَٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَٰتِهِمْ يُحَافِظُونَ

and who keep up their prayers,

M.A.S. Abdel Haleem

அவர்கள் தங்கள் தொழுகைகளையும் (காலாகாலத்தில் தவறாது) கடைப் பிடித்து தொழுது வருவார்கள்.

Abdul Hameed Baqavi

أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْوَٰرِثُونَ

will rightly be given

M.A.S. Abdel Haleem

இவர்கள்தான் (சொர்க்கத்திற்கு) உண்மையான வாரிசுதாரர்கள்.

Abdul Hameed Baqavi

ٱلَّذِينَ يَرِثُونَ ٱلْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَـٰلِدُونَ

Paradise as their own, there to remain.

M.A.S. Abdel Haleem

ஆகவே, இவர்கள் ‘ஃபிர்தவ்ஸ்' என்னும் சொர்க்கத்திற்கு வாரிசுகளாகி அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.

Abdul Hameed Baqavi

وَلَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ مِن سُلَـٰلَةٍ مِّن طِينٍ

We created man from an essence of clay,

M.A.S. Abdel Haleem

நிச்சயமாக (ஆரம்பத்தில் முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம்.

Abdul Hameed Baqavi

ثُمَّ جَعَلْنَـٰهُ نُطْفَةً فِى قَرَارٍ مَّكِينٍ

then We placed him as a drop of fluid in a safe place,

M.A.S. Abdel Haleem

பின்னர், அதை நாம் இந்திரியமாக்கி ஒரு பத்திரமான இடத்தில் வைத்தோம்.

Abdul Hameed Baqavi

ثُمَّ خَلَقْنَا ٱلنُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا ٱلْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا ٱلْمُضْغَةَ عِظَـٰمًا فَكَسَوْنَا ٱلْعِظَـٰمَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَـٰهُ خَلْقًا ءَاخَرَ ۚ فَتَبَارَكَ ٱللَّهُ أَحْسَنُ ٱلْخَـٰلِقِينَ

then We made that drop into a clinging form, and We made that form into a lump of flesh, and We made that lump into bones, and We clothed those bones with flesh, and later We made him into other forms––glory be to God, the best of creators!––

M.A.S. Abdel Haleem

பின்னர், அந்த இந்திரியத்தை கருவாக ஆக்கினோம். பின்னர், அக்கருவை சிறிய சதைத் துண்டாக ஆக்கினோம். பின்னர், அந்த சிறிய சதைத் துண்டில் எலும்புகளை உருவாக்கினோம், அடுத்து அவ்வெலும்புகளுக்கு மேல் சதையை அமைத்தோம். பின்னர், அதை வேறு ஒரு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். படைப்பவர்களிலெல்லாம் மிக்க அழகானவனான அந்த அல்லாஹ் மிக பாக்கியம் பொருந்தியவன்.

Abdul Hameed Baqavi

ثُمَّ إِنَّكُم بَعْدَ ذَٰلِكَ لَمَيِّتُونَ

then you will die

M.A.S. Abdel Haleem

(மனிதர்களே!) இதற்குப் பின்னர், நிச்சயமாக நீங்கள் இறப்பவர்களே!

Abdul Hameed Baqavi

ثُمَّ إِنَّكُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ تُبْعَثُونَ

and then, on the Day of Resurrection, you will be raised up again.

M.A.S. Abdel Haleem

அதற்குப் பின்னர் மறுமைநாளில் நிச்சயமாக நீங்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்.

Abdul Hameed Baqavi

وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَآئِقَ وَمَا كُنَّا عَنِ ٱلْخَلْقِ غَـٰفِلِينَ

We created seven levels above you: We are never unmindful of Our creation.

M.A.S. Abdel Haleem

(மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா படைத்திருக்கிறோம்?) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும் நாமே படைத்தோம். (அவை ஒவ்வொன்றிலும் எத்தனையோ படைப்புகள் இருக்கின்றன. இவற்றைப் படைத்து இருப்பதுடன்) இப்படைப்புக(ளுக்கு வேண்டியவைக)ளைப் பற்றி நாம் பராமுகமாகவும் இருக்கவில்லை. (அவற்றுக்கு வேண்டியவை அனைத்தையும் முழுமையாக நாம் படைத்தும் இருக்கிறோம்.)

Abdul Hameed Baqavi

وَأَنزَلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍ فَأَسْكَنَّـٰهُ فِى ٱلْأَرْضِ ۖ وَإِنَّا عَلَىٰ ذَهَابٍۭ بِهِۦ لَقَـٰدِرُونَ

We sent water down from the sky in due measure and lodged it in the earth––We have the power to take it all away if We so wish––

M.A.S. Abdel Haleem

மேகத்திலிருந்து (நம்) திட்டப்படியே மழையை பொழியச் செய்கிறோம். அதைப் பூமியில் தங்கும் படியும் செய்கிறோம். அதைப் (பூமியிலிருந்து) போக்கிவிடவும் நிச்சயமாக நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்.

Abdul Hameed Baqavi

فَأَنشَأْنَا لَكُم بِهِۦ جَنَّـٰتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَـٰبٍ لَّكُمْ فِيهَا فَوَٰكِهُ كَثِيرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ

with it We produced for you gardens of date palms and vines, with many fruits there for you to eat,

M.A.S. Abdel Haleem

அதைக் கொண்டு பேரீச்சை, திராட்சை (ஆகிய) தோப்புகளையும் உங்களுக்காக நாம் உற்பத்தி செய்கிறோம். அவற்றில் உங்களுக்கு வேண்டிய பல கனிவர்க்கங்கள் இருக்கின்றன. அவற்றில் (பலவற்றை) நீங்கள் புசிக்கிறீர்கள்.

Abdul Hameed Baqavi

وَشَجَرَةً تَخْرُجُ مِن طُورِ سَيْنَآءَ تَنۢبُتُ بِٱلدُّهْنِ وَصِبْغٍ لِّلْـَٔاكِلِينَ

and a tree, growing out of Mount Sinai, that produces oil and seasoning for your food.

M.A.S. Abdel Haleem

‘தூர்ஸீனாய்' மலையில் முளைக்கின்ற (ஜைத்தூன் என்னும் ஒலிவ) மரத்தையும் (நாம் உற்பத்தி செய்கிறோம்). அது எண்ணையையும் புசிப்பவர்களுக்கு ஒரு சுவையையும் (குழம்பையும்) தருகிறது.

Abdul Hameed Baqavi

وَإِنَّ لَكُمْ فِى ٱلْأَنْعَـٰمِ لَعِبْرَةً ۖ نُّسْقِيكُم مِّمَّا فِى بُطُونِهَا وَلَكُمْ فِيهَا مَنَـٰفِعُ كَثِيرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ

There is a lesson for you in livestock: We produce milk for you to drink from their bellies. And they have many other benefits: you eat them

M.A.S. Abdel Haleem

நிச்சயமாக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் மடியில் இருந்து (பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும், உங்களுக்கு அவற்றில் அநேக பயன்களும் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நீங்கள் புசிக்கிறீர்கள்.

Abdul Hameed Baqavi

وَعَلَيْهَا وَعَلَى ٱلْفُلْكِ تُحْمَلُونَ

and you ride on them, as you do in ships.

M.A.S. Abdel Haleem

அவற்றின் மீதும், கப்பல்களின் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள்.

Abdul Hameed Baqavi

وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِۦ فَقَالَ يَـٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَـٰهٍ غَيْرُهُۥٓ ۖ أَفَلَا تَتَّقُونَ

We sent Noah to his people. He said, ‘My people, serve God, for He is your only god. Will you not heed Him?’

M.A.S. Abdel Haleem

நிச்சயமாக நாம் ‘‘நூஹ்' (நபியை) நம் தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘ என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லவே இல்லை. அவனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமா?'' என்று கூறினார்.

Abdul Hameed Baqavi

فَقَالَ ٱلْمَلَؤُا۟ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَوْمِهِۦ مَا هَـٰذَآ إِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ يُرِيدُ أَن يَتَفَضَّلَ عَلَيْكُمْ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَأَنزَلَ مَلَـٰٓئِكَةً مَّا سَمِعْنَا بِهَـٰذَا فِىٓ ءَابَآئِنَا ٱلْأَوَّلِينَ

But the leading disbelievers among his people said, ‘He is merely a mortal like you, trying to gain some superiority over you. God would have sent down angels if He had wished; besides, we never heard of anything like this from our forefathers.

M.A.S. Abdel Haleem

அவரை நிராகரித்துவிட்ட அவருடைய மக்களில் உள்ள தலைவர்கள் (தமது மக்களுக்கு நூஹ் நபியைச் சுட்டிக் காண்பித்து) இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறில்லை. எனினும், அவர் உங்கள் மீது மேலான பதவியை வகிக்கவே நாடுகிறார். (மெய்யாகவே) அல்லாஹ் (நம்மிடம் ஒரு தூதரை அனுப்ப) நாடியிருந்தால் வானவர்களையே அனுப்பிவைத்திருப்பான். முன்னுள்ள எங்கள் மூதாதைகளிடம் இத்தகைய விஷயத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்றும்,

Abdul Hameed Baqavi

إِنْ هُوَ إِلَّا رَجُلٌۢ بِهِۦ جِنَّةٌ فَتَرَبَّصُوا۟ بِهِۦ حَتَّىٰ حِينٍ

He is just a madman, so let’s wait and see what happens to him.’

M.A.S. Abdel Haleem

‘‘ இவர் ஒரு பைத்தியக்காரராகவே தவிர வேறில்லை. ஆகவே, இவர் விஷயத்தில் (இவர் கூறுவது நிகழும் வரை) சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்'' என்றும் கூறினார்கள்.

Abdul Hameed Baqavi

قَالَ رَبِّ ٱنصُرْنِى بِمَا كَذَّبُونِ

Noah said, ‘My Lord, help me! They call me a liar,’

M.A.S. Abdel Haleem

(அதற்கு நூஹ் நபி) ‘‘என் இறைவனே! இவர்கள் என்னைப் பொய்யாக்கி விட்டார்கள். ஆகவே, நீ எனக்கு உதவி செய்'' என்று பிரார்த்தித்தார்.

Abdul Hameed Baqavi

فَأَوْحَيْنَآ إِلَيْهِ أَنِ ٱصْنَعِ ٱلْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا فَإِذَا جَآءَ أَمْرُنَا وَفَارَ ٱلتَّنُّورُ ۙ فَٱسْلُكْ فِيهَا مِن كُلٍّ زَوْجَيْنِ ٱثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَن سَبَقَ عَلَيْهِ ٱلْقَوْلُ مِنْهُمْ ۖ وَلَا تُخَـٰطِبْنِى فِى ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ ۖ إِنَّهُم مُّغْرَقُونَ

and so We revealed to him: ‘Build the Ark under Our watchful eye and according to Our revelation. When Our command comes and water gushes up out of the earth,take pairs of every species on board, and your family, except for those on whom the sentence has already been passed- do not plead with me for the evildoers: they will be drowned-

M.A.S. Abdel Haleem

அதற்கு நாம் அவரை நோக்கி நீர் ‘‘நாம் அறிவிக்கின்றபடி நம் கண்முன் ஒரு கப்பலைச் செய்வீராக. நம் உத்தரவு ஏற்பட்டு அடுப்புப்பொங்க ஆரம்பித்தால் (ஒவ்வோர் உயிர்ப் பிராணிகளிலும்) ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜோடியையும், உமது குடும்பத்தினரையும் நீர் அதில் ஏற்றிக் கொள்வீராக. ஆயினும், எவன் மீது நம் தண்டனை விதிக்கப்பட்டு விட்டதோ அவனைத் தவிர. (ஏனென்றால்,) அநியாயம் செய்பவ(ர் உங்கள் குடும்பத்தவராயினும் அவ)ரைப் பற்றி நீர் என்னிடம் ஏதும் (சிபாரிசாகப்) பேசாதீர். நிச்சயமாக அவர்கள் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டு விடுவார்கள்'' என்று வஹ்யி அறிவித்தோம்.

Abdul Hameed Baqavi

فَإِذَا ٱسْتَوَيْتَ أَنتَ وَمَن مَّعَكَ عَلَى ٱلْفُلْكِ فَقُلِ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى نَجَّىٰنَا مِنَ ٱلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ

and when you and your companions are settled on the Ark, say, “Praise be to God, who delivered us from the wicked people,”

M.A.S. Abdel Haleem

நீரும் உம்முடன் உள்ளவர்களும் கப்பலில் ஏறி அமர்ந்து கொண்டதன் பின்னர் ‘‘ அநியாயக்கார இந்த மக்களில் இருந்து எங்களை பாதுகாத்துக் கொண்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்'' என்று கூறுவீராக.

Abdul Hameed Baqavi

وَقُل رَّبِّ أَنزِلْنِى مُنزَلًا مُّبَارَكًا وَأَنتَ خَيْرُ ٱلْمُنزِلِينَ

and say, “My Lord, let me land with Your blessing: it is You who provide the best landings”.’

M.A.S. Abdel Haleem

‘‘என் இறைவனே! நீ என்னை மிக்க பாக்கியமுள்ள(வனாக பாக்கியம் பெற்ற இடத்தில் உன்) விருந்தாளியாக(க் கப்பலில் இருந்து) இறக்கிவைப்பாயாக! நீயோ விருந்தாளிகளை வரவேற்று உபசரிப்பதில் மிக்க மேலானவன் என்றும் பிரார்த்திப்பீராக'' (என்றும் கூறினோம்.)

Abdul Hameed Baqavi

إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ وَإِن كُنَّا لَمُبْتَلِينَ

There are signs in all this: We have always put [people] to the test.

M.A.S. Abdel Haleem

நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (நிச்சயமாக மனிதர்களின் நம்பிக்கையை) நாம் சோதிப்பவர்களாக இருக்கிறோம்.

Abdul Hameed Baqavi

ثُمَّ أَنشَأْنَا مِنۢ بَعْدِهِمْ قَرْنًا ءَاخَرِينَ

Then We raised another generation after them,

M.A.S. Abdel Haleem

(வெள்ளப் பிரளயத்தில் மூழ்கிவிட்ட) இவர்களுக்குப் பின்னர் நாம் (‘ஆது' என்னும்) மற்றொரு வகுப்பினரை உற்பத்தி செய்தோம்.

Abdul Hameed Baqavi

فَأَرْسَلْنَا فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَـٰهٍ غَيْرُهُۥٓ ۖ أَفَلَا تَتَّقُونَ

and sent one of their own as a messenger: ‘Serve God, for He is your only god. Will you not heed Him?’

M.A.S. Abdel Haleem

அவர்களில் உள்ள (‘ஹூது' என்ற) ஒருவரையே அவர்களுக்கு நம் தூதராக நாம் அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘ அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லவே இல்லை. அவனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமா?'' (என்று கூறினார்.)

Abdul Hameed Baqavi

وَقَالَ ٱلْمَلَأُ مِن قَوْمِهِ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِلِقَآءِ ٱلْـَٔاخِرَةِ وَأَتْرَفْنَـٰهُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا مَا هَـٰذَآ إِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ يَأْكُلُ مِمَّا تَأْكُلُونَ مِنْهُ وَيَشْرَبُ مِمَّا تَشْرَبُونَ

But the leading disbelievers among his people, who denied the Meeting in the Hereafter, to whom We had granted ease and plenty in this life, said, ‘He is just a mortal like you- he eats what you eat and drinks what you drink-

M.A.S. Abdel Haleem

(ஹூது நபியுடைய) மக்களுக்கு இவ்வுலக வாழ்க்கையின் சுகபோகங்களை நாம் கொடுத்திருந்தும் அவர்களுடைய தலைவர்கள் (அவற்றையும்) அவரையும் நிராகரித்துவிட்டு மறுமையைச் சந்திப்பதையும் பொய்யாக்கி (‘ஹூது' நபியை சுட்டிக் காண்பித்து) ‘‘ இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதனே தவிர வேறில்லை. நீங்கள் புசிப்பதையே அவரும் புசிக்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்.

Abdul Hameed Baqavi

وَلَئِنْ أَطَعْتُم بَشَرًا مِّثْلَكُمْ إِنَّكُمْ إِذًا لَّخَـٰسِرُونَ

and you will really be losers if you obey a mortal like yourselves.

M.A.S. Abdel Haleem

ஆகவே உங்களைப் போன்ற (இம்) மனிதனை நீங்கள் பின்பற்றினால் நிச்சயமாக நீங்கள் நஷ்டமே அடைந்துவிடுவீர்கள்.

Abdul Hameed Baqavi

أَيَعِدُكُمْ أَنَّكُمْ إِذَا مِتُّمْ وَكُنتُمْ تُرَابًا وَعِظَـٰمًا أَنَّكُم مُّخْرَجُونَ

How can he promise you that after you die and become dust and bones you will be brought out alive?

M.A.S. Abdel Haleem

நீங்கள் இறந்து எலும்பாகவும், மண்ணாகவும் ஆனதன் பின்னர் நிச்சயமாக நீங்கள் (உயிருடன்) வெளிப்படுத்தப்படுவீர்கள் என்று அவர் உங்களை பயமுறுத்துகிறாரா?

Abdul Hameed Baqavi

۞ هَيْهَاتَ هَيْهَاتَ لِمَا تُوعَدُونَ

What you are promised is very farfetched.

M.A.S. Abdel Haleem

அவர் உங்களை பயமுறுத்தும் விஷயம் வெகு தூரமோ தூரம் (அது ஆகக்கூடியதன்று).

Abdul Hameed Baqavi

إِنْ هِىَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوثِينَ

There is only the life of this world: we die, we live, but we will never be resurrected.

M.A.S. Abdel Haleem

நமக்கு இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. இதிலேயே நாம் வாழ்ந்திருந்து இதிலேயே இறந்துவிடுவோம். (இதற்குப் பின்னர் உயிர் கொடுக்கப்பட்டு) நாம் எழுப்பப்படப் போவதில்லை.

Abdul Hameed Baqavi

إِنْ هُوَ إِلَّا رَجُلٌ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا وَمَا نَحْنُ لَهُۥ بِمُؤْمِنِينَ

He is just a man making lies up about God. We will never believe in him.’

M.A.S. Abdel Haleem

(ஹூது நபி என்னும்) இம்மனிதர் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறுபவரே தவிர வேறில்லை. இவரை நாம் நம்பவே மாட்டோம்'' என்றார்கள்.

Abdul Hameed Baqavi

قَالَ رَبِّ ٱنصُرْنِى بِمَا كَذَّبُونِ

The prophet said, ‘My Lord, help me! They call me a liar,’

M.A.S. Abdel Haleem

அதற்கவர் ‘‘ என் இறைவனே! இவர்கள் என்னைப் பொய்யாக்கி விட்டார்கள். நீதான் எனக்கு உதவிசெய்ய வேண்டும்'' என்று பிரார்த்தித்தார்.

Abdul Hameed Baqavi

قَالَ عَمَّا قَلِيلٍ لَّيُصْبِحُنَّ نَـٰدِمِينَ

and so God said, ‘Soon they will be filled with regret.’

M.A.S. Abdel Haleem

அதற்கு இறைவன் ‘‘(ஹூதே சிறிது பொறுத்திரும்!) அதிசீக்கிரத்தில் இவர்கள் துக்கத்தில் ஆழ்ந்து விடுவார்கள்'' என்று கூறினான்.

Abdul Hameed Baqavi

فَأَخَذَتْهُمُ ٱلصَّيْحَةُ بِٱلْحَقِّ فَجَعَلْنَـٰهُمْ غُثَآءً ۚ فَبُعْدًا لِّلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ

The blast justly struck them and We swept them away like scum. Away with the evildoers!

M.A.S. Abdel Haleem

ஆகவே (இடி முழக்கம் போன்ற) ஒரு சப்தம் மெய்யாகவே அவர்களைப் பிடித்துக் கொண்டது. நாம் அவர்களை (அழித்துக்) குப்பைக் கூளங்களைப் போல் ஆக்கிவிட்டோம். ஆகவே, அநியாயக்கார மக்கள் மீது (இறைவனின்) சாபம் ஏற்பட்டுவிட்டது.

Abdul Hameed Baqavi

ثُمَّ أَنشَأْنَا مِنۢ بَعْدِهِمْ قُرُونًا ءَاخَرِينَ

We raised other generations after them-

M.A.S. Abdel Haleem

இவர்களுக்குப் பின்னரும் மற்ற வகுப்பினர் பலரை நாம் உற்பத்தி செய்தோம்.

Abdul Hameed Baqavi

مَا تَسْبِقُ مِنْ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسْتَـْٔخِرُونَ

no community can advance or delay its time-

M.A.S. Abdel Haleem

(அவர்களில் எனக்கு மாறுசெய்த) ஒவ்வொரு வகுப்பாரும் (அவர்கள் அழிந்துபோக நாம் ஏற்படுத்திய) அவர்களது தவணையை முந்தவுமில்லை; பிந்தவுமில்லை. (சரியாக அத்தவணையில் அழிந்து விட்டனர்.)

Abdul Hameed Baqavi

ثُمَّ أَرْسَلْنَا رُسُلَنَا تَتْرَا ۖ كُلَّ مَا جَآءَ أُمَّةً رَّسُولُهَا كَذَّبُوهُ ۚ فَأَتْبَعْنَا بَعْضَهُم بَعْضًا وَجَعَلْنَـٰهُمْ أَحَادِيثَ ۚ فَبُعْدًا لِّقَوْمٍ لَّا يُؤْمِنُونَ

and We sent Our messengers in succession: whenever a messenger came to a community they invariably called him a liar, so We destroyed them one after the other and made them into cautionary tales. Away with the disbelievers!

M.A.S. Abdel Haleem

பின்னரும் நம் தூதர்களை ஒருவர் பின் ஒருவராக நாம் அனுப்பிக் கொண்டே இருந்தோம். ஒரு வகுப்பாரிடம் அவர்களுடைய தூதர் வந்தபோதெல்லாம் அவர்கள் அவரைப் பொய்யாக்கிக் கொண்டே இருந்தார்கள். ஆகவே, நாமும் (அவ்வகுப்பினர்களை) ஒருவருக்குப் பின் ஒருவராக அழித்துக் கொண்டே வந்து அவர்கள் அனைவரையும் (பின்னுள்ளவர்கள் பேசக்கூடிய) வெறும் சரித்திரமாக்கி விட்டோம். ஆகவே, நம்பிக்கை கொள்ளாத (இத்தகைய) மக்களுக்குக் கேடுதான்.

Abdul Hameed Baqavi

ثُمَّ أَرْسَلْنَا مُوسَىٰ وَأَخَاهُ هَـٰرُونَ بِـَٔايَـٰتِنَا وَسُلْطَـٰنٍ مُّبِينٍ

Then We sent Moses and his brother Aaron, with Our signs and clear authority,

M.A.S. Abdel Haleem

பின்னர், மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நம் வசனங்களைக் கொண்டும், தெளிவான ஆதாரங்களைக் கொண்டும் நாம் அனுப்பினோம்.

Abdul Hameed Baqavi

إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦ فَٱسْتَكْبَرُوا۟ وَكَانُوا۟ قَوْمًا عَالِينَ

to Pharaoh and his prominent leaders, but they responded with arrogance: they were a haughty people.

M.A.S. Abdel Haleem

ஃபிர்அவ்னிடமும் அவனுடைய பிரதானிகளிடமும் (அனுப்பிவைத்தோம்). அவர்களோ கர்வம் கொண்டு பெருமை அடிக்கும் மக்களாக இருந்தார்கள்.

Abdul Hameed Baqavi

فَقَالُوٓا۟ أَنُؤْمِنُ لِبَشَرَيْنِ مِثْلِنَا وَقَوْمُهُمَا لَنَا عَـٰبِدُونَ

They said, ‘Are we to believe in two mortals like us? And their people are our servants?’

M.A.S. Abdel Haleem

நம்மைப் போன்ற மனிதர்களான (இந்த) இருவரை நாம் நம்பிக்கை கொள்வோமா? (அதுவும்) அவர்களது சமூகத்தினரோ, நமக்கு அடிமைகளாக இருக்கின்றனர்.

Abdul Hameed Baqavi

فَكَذَّبُوهُمَا فَكَانُوا۟ مِنَ ٱلْمُهْلَكِينَ

and so they called them both liars: they became another ruined people.

M.A.S. Abdel Haleem

ஆகவே, இவ்விருவரையும் பொய்யரென அவர்கள் கூறினார்கள். இதன் காரணமாக அவர்கள் அழிக்கப்பட்டுப் போயினர்.

Abdul Hameed Baqavi

وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَـٰبَ لَعَلَّهُمْ يَهْتَدُونَ

We gave Moses the Scripture, so that they might be rightly guided.

M.A.S. Abdel Haleem

அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக மூஸாவுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்தோம். (எனினும், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.)

Abdul Hameed Baqavi

وَجَعَلْنَا ٱبْنَ مَرْيَمَ وَأُمَّهُۥٓ ءَايَةً وَءَاوَيْنَـٰهُمَآ إِلَىٰ رَبْوَةٍ ذَاتِ قَرَارٍ وَمَعِينٍ

We made the son of Mary and his mother a sign; We gave them shelter on a peaceful hillside with flowing water.

M.A.S. Abdel Haleem

மர்யமுடைய மகனையும் அவருடைய தாயையும் நாம் ஓர் அத்தாட்சி ஆக்கி அவ்விருவரையும் மிக்க செழிப்பும், நீர் வளமும் பொருந்திய, வசிப்பதற்கு மிகவும் தகுதியான உயரிய பூமியில் வசிக்கும்படிச் செய்தோம்.

Abdul Hameed Baqavi

يَـٰٓأَيُّهَا ٱلرُّسُلُ كُلُوا۟ مِنَ ٱلطَّيِّبَـٰتِ وَٱعْمَلُوا۟ صَـٰلِحًا ۖ إِنِّى بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ

Messengers, eat good things and do good deeds: I am well aware of what you do.

M.A.S. Abdel Haleem

(நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரையும் நோக்கி) “என் தூதர்களே! நீங்கள் பரிசுத்தமானவற்றையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்பவற்றை நன்கறிவேன்.

Abdul Hameed Baqavi

وَإِنَّ هَـٰذِهِۦٓ أُمَّتُكُمْ أُمَّةً وَٰحِدَةً وَأَنَا۠ رَبُّكُمْ فَٱتَّقُونِ

This community of yours is one- and I am your Lord: be mindful of Me-

M.A.S. Abdel Haleem

நிச்சயமாக உங்கள் இந்த மார்க்கம் ஒரே ஒரு வழிதான். (இதில் வேற்றுமை கிடையாது.) நான்தான் உங்கள் இறைவன். ஆகவே, நீங்கள் என்னையே அஞ்சுங்கள்'' (என்று கட்டளை இட்டிருந்தோம். அவர்களும் தம் மக்களுக்கு இவ்வாறே கூறி வந்தனர்.)

Abdul Hameed Baqavi

فَتَقَطَّعُوٓا۟ أَمْرَهُم بَيْنَهُمْ زُبُرًا ۖ كُلُّ حِزْبٍۭ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ

but they have split their community into sects, each rejoicing in their own.

M.A.S. Abdel Haleem

எனினும், (யூதர்களும், கிறித்தவர்களும்) தங்கள் வேதத்தை(ப் புரட்டி) பலவாறாகப் பிரித்துக்கொண்டு (அவர்களில்) ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடம் உள்ளவற்றைக் கொண்டு சந்தோஷம் அடைகின்றனர்.

Abdul Hameed Baqavi

فَذَرْهُمْ فِى غَمْرَتِهِمْ حَتَّىٰ حِينٍ

So [Muhammad] leave them for a while steeped [in their ignorance].

M.A.S. Abdel Haleem

ஆகவே, (நபியே!) நீர் அவர்களை ஒரு காலம் வரை அவர்களுடைய மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்க விட்டு விடுவீராக.

Abdul Hameed Baqavi

أَيَحْسَبُونَ أَنَّمَا نُمِدُّهُم بِهِۦ مِن مَّالٍ وَبَنِينَ

Do they reckon that, by giving them wealth and sons,

M.A.S. Abdel Haleem

நாம் அவர்களுக்கு ஆண் சந்ததிகளையும் பொருள்களையும் கொடுத்து வருவதைப் பற்றி அவர்கள் என்ன நினைத்துக் கொண்டனர்?

Abdul Hameed Baqavi

نُسَارِعُ لَهُمْ فِى ٱلْخَيْرَٰتِ ۚ بَل لَّا يَشْعُرُونَ

We race to give them good things? They really have no idea!

M.A.S. Abdel Haleem

இதனால் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நன்மை செய்வதில் தீவிரமாக இருக்கிறோம் என்று நினைக்கின்றனரா? அவ்வாறல்ல! (அது எதற்காக என்பதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.

Abdul Hameed Baqavi

إِنَّ ٱلَّذِينَ هُم مِّنْ خَشْيَةِ رَبِّهِم مُّشْفِقُونَ

Those who stand in awe of their Lord,

M.A.S. Abdel Haleem

நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களும்,

Abdul Hameed Baqavi

وَٱلَّذِينَ هُم بِـَٔايَـٰتِ رَبِّهِمْ يُؤْمِنُونَ

who believe in His messages,

M.A.S. Abdel Haleem

எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை மெய்யாகவே நம்பிக்கைகொள்கிறார்களோ அவர்களும்,

Abdul Hameed Baqavi

وَٱلَّذِينَ هُم بِرَبِّهِمْ لَا يُشْرِكُونَ

who do not ascribe partners to Him,

M.A.S. Abdel Haleem

எவர்கள் தங்கள் இறைவனுக்கு எவரையும் இணை ஆக்காமல் இருக்கின்றனரோ அவர்களும்,

Abdul Hameed Baqavi

وَٱلَّذِينَ يُؤْتُونَ مَآ ءَاتَوا۟ وَّقُلُوبُهُمْ وَجِلَةٌ أَنَّهُمْ إِلَىٰ رَبِّهِمْ رَٰجِعُونَ

who always give with hearts that tremble at the thought that they must return to Him,

M.A.S. Abdel Haleem

எவர்கள் தங்களுக்குச் சாத்தியமான வரை தானம் கொடுப்பதுடன் அவர்களுடைய உள்ளங்கள் நிச்சயமாக தங்கள் இறைவனிடம் செல்வோம் என்று பயந்து கொண்டிருக்கின்றனவோ அவர்களும்,

Abdul Hameed Baqavi

أُو۟لَـٰٓئِكَ يُسَـٰرِعُونَ فِى ٱلْخَيْرَٰتِ وَهُمْ لَهَا سَـٰبِقُونَ

are the ones who race toward good things, and they will be the first to get them.

M.A.S. Abdel Haleem

ஆகிய இவர்கள்தான் நன்மையான காரியங்களில் விரைந்து செல்கிறவர்கள். மேலும், அவர்கள் அவற்றை செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்கின்றனர்.

Abdul Hameed Baqavi

وَلَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۖ وَلَدَيْنَا كِتَـٰبٌ يَنطِقُ بِٱلْحَقِّ ۚ وَهُمْ لَا يُظْلَمُونَ

We do not burden any soul with more than it can bear- We have a Record that tells the truth- they will not be wronged.

M.A.S. Abdel Haleem

எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக (எதையும் செய்யும்படி) நாம் நிர்ப்பந்திப்பதில்லை. (ஒவ்வொருவரின்) உண்மையை உரைக்கும் தினசரிக் குறிப்பும் நம்மிடம் இருக்கிறது. (அவர்களின் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

Abdul Hameed Baqavi

بَلْ قُلُوبُهُمْ فِى غَمْرَةٍ مِّنْ هَـٰذَا وَلَهُمْ أَعْمَـٰلٌ مِّن دُونِ ذَٰلِكَ هُمْ لَهَا عَـٰمِلُونَ

But the disbelievers’ hearts are steeped [in ignorance of ] all this; and there are other things besides this that they do.

M.A.S. Abdel Haleem

எனினும், (நிராகரிக்கும்) அவர்களுடைய உள்ளங்கள் இ(வ்வேதத்)தைப் பற்றி (சந்தேகித்து) மடமையில் ஆழ்ந்து கிடக்கின்றன. இதையன்றி அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேறு பல (தீய)காரியங்களும் இருக்கின்றன.

Abdul Hameed Baqavi

حَتَّىٰٓ إِذَآ أَخَذْنَا مُتْرَفِيهِم بِٱلْعَذَابِ إِذَا هُمْ يَجْـَٔرُونَ

When We bring Our punishment on those corrupted with wealth, they will cry for help:

M.A.S. Abdel Haleem

ஆகவே, அவர்களின் தலைவர்களை வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டாலோ, அவர்கள் (அந்நேரத்தில் திடுக்கிட்டுத் தங்களை காப்பாற்றும்படி) பயந்து சப்தமிடுகின்றனர்.

Abdul Hameed Baqavi

لَا تَجْـَٔرُوا۟ ٱلْيَوْمَ ۖ إِنَّكُم مِّنَّا لَا تُنصَرُونَ

‘Do not cry out today: you will get no help from Us.

M.A.S. Abdel Haleem

(அச்சமயம் அவர்களை நோக்கி) ‘‘இன்றைய தினம் நீங்கள் பயந்து சப்தமிடாதீர்கள். நிச்சயமாக நீங்கள் நம்மால் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.

Abdul Hameed Baqavi

قَدْ كَانَتْ ءَايَـٰتِى تُتْلَىٰ عَلَيْكُمْ فَكُنتُمْ عَلَىٰٓ أَعْقَـٰبِكُمْ تَنكِصُونَ

Time and time again My messages were recited to you, but you turned arrogantly on your heels,

M.A.S. Abdel Haleem

நிச்சயமாக எனது வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்ட அச்சமயம் (அவற்றைப் புறக்கணித்து) நீங்கள் பின் வாங்கினீர்கள்.

Abdul Hameed Baqavi

مُسْتَكْبِرِينَ بِهِۦ سَـٰمِرًا تَهْجُرُونَ

and spent the evening making fun of [the Quran].’

M.A.S. Abdel Haleem

நீங்கள் கர்வங்கொண்டு (உங்கள்) இராக் கதைகளிலும் இதைப் பற்றி (பரிகாசம் செய்து) பிதற்றிக் கொண்டிருந்தீர்கள்'' (என்று கூறப்படும்).

Abdul Hameed Baqavi

أَفَلَمْ يَدَّبَّرُوا۟ ٱلْقَوْلَ أَمْ جَآءَهُم مَّا لَمْ يَأْتِ ءَابَآءَهُمُ ٱلْأَوَّلِينَ

Have they not contemplated the Word of God? Has something come to them that did not come to their forefathers?

M.A.S. Abdel Haleem

(நம்) வாக்கியத்தை அவர்கள் கவனிக்கவில்லையா? அல்லது அவர்களுடைய முந்திய மூதாதைகளுக்கு வராதது ஏதும் இவர்களுக்கு வந்துவிட்டதா?

Abdul Hameed Baqavi

أَمْ لَمْ يَعْرِفُوا۟ رَسُولَهُمْ فَهُمْ لَهُۥ مُنكِرُونَ

Do they not recognize their Messenger? So why do they reject him?

M.A.S. Abdel Haleem

அல்லது தங்களிடம் வந்த தூதரை தாங்கள் அறியவில்லை என்பதாக(க் கூறி) அவர்கள் நிராகரிக்கின்றனரா?

Abdul Hameed Baqavi

أَمْ يَقُولُونَ بِهِۦ جِنَّةٌۢ ۚ بَلْ جَآءَهُم بِٱلْحَقِّ وَأَكْثَرُهُمْ لِلْحَقِّ كَـٰرِهُونَ

Why do they say he is possessed? He has brought them the truth and most of them hate it,

M.A.S. Abdel Haleem

அல்லது ‘‘ அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது'' என இவர்கள் கூறுகின்றனரா? இவை ஒன்றுமில்லை. (நம் தூதர்) அவர்களுக்குச் சத்தியத்தைக் கொண்டு வந்தார். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த சத்தியத்தையே வெறுக்கின்றனர்.

Abdul Hameed Baqavi

وَلَوِ ٱتَّبَعَ ٱلْحَقُّ أَهْوَآءَهُمْ لَفَسَدَتِ ٱلسَّمَـٰوَٰتُ وَٱلْأَرْضُ وَمَن فِيهِنَّ ۚ بَلْ أَتَيْنَـٰهُم بِذِكْرِهِمْ فَهُمْ عَن ذِكْرِهِم مُّعْرِضُونَ

but if the truth were in accordance with their desires, the heavens, the earth, and everyone in them would disintegrate. We have brought them their Reminder and they turn away from it.

M.A.S. Abdel Haleem

சத்தியம் அவர்களுடைய (தப்பான) விருப்பத்தைப் பின்பற்றுவதென்றால் நிச்சயமாக வானங்களும் பூமியும் அவற்றில் உள்ளவையும் அழிந்துவிடும். எனினும், அவர்களுக்கு நல்ல உபதேசத்தையே அனுப்பினோம். அவர்களோ தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை புறக்கணித்து விட்டனர்.

Abdul Hameed Baqavi

أَمْ تَسْـَٔلُهُمْ خَرْجًا فَخَرَاجُ رَبِّكَ خَيْرٌ ۖ وَهُوَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ

Do you [Prophet] ask them for any payment? Your Lord’s is the best payment: He is the Best of Providers.

M.A.S. Abdel Haleem

அல்லது, நீர் அவர்களிடம் ஒரு கூலியை கேட்கிறீரா? (அதுவும் இல்லை. ஏனென்றால்,) உமது இறைவன் (உமக்குத்) தரும் கூலியே மிக்க மேலானதாகும். அவனோ கொடையாளிகளிலெல்லாம் மிக்க மேலானவன் ஆவான்.

Abdul Hameed Baqavi

وَإِنَّكَ لَتَدْعُوهُمْ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ

You call them to a straight path

M.A.S. Abdel Haleem

(நபியே!) நிச்சயமாக நீர் அவர்களை நேரான வழிக்கே அழைக்கிறீர்.

Abdul Hameed Baqavi

وَإِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ عَنِ ٱلصِّرَٰطِ لَنَـٰكِبُونَ

and those who do not believe in the Hereafter turn away from that path.

M.A.S. Abdel Haleem

எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ளவில்லையோ நிச்சயமாக அவர்கள் நேரான வழியைப் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றனர்.

Abdul Hameed Baqavi

۞ وَلَوْ رَحِمْنَـٰهُمْ وَكَشَفْنَا مَا بِهِم مِّن ضُرٍّ لَّلَجُّوا۟ فِى طُغْيَـٰنِهِمْ يَعْمَهُونَ

Even if We were to show them mercy and relieve them of distress, they would blindly persist in their transgression.

M.A.S. Abdel Haleem

நாம் அவர்கள் மீது கருணை காண்பித்து அவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை நீக்கியபோதிலும் அவர்கள் தங்கள் வழிகேட்டிலேயே மூழ்கித் தட்டழிகின்றனர்.

Abdul Hameed Baqavi

وَلَقَدْ أَخَذْنَـٰهُم بِٱلْعَذَابِ فَمَا ٱسْتَكَانُوا۟ لِرَبِّهِمْ وَمَا يَتَضَرَّعُونَ

We have already afflicted them, yet they did not submit to their Lord: they will not humble themselves

M.A.S. Abdel Haleem

நிச்சயமாக நாம் அவர்களை வேதனையைக் கொண்டு பிடித்துக் கொண்டோம். ஆனால், அவர்கள் தங்கள் இறைவனிடம் திரும்பவும் இல்லை; (அவனிடம்) பணிந்து பிரார்த்தனை செய்யவும் இல்லை.

Abdul Hameed Baqavi

حَتَّىٰٓ إِذَا فَتَحْنَا عَلَيْهِم بَابًا ذَا عَذَابٍ شَدِيدٍ إِذَا هُمْ فِيهِ مُبْلِسُونَ

until We open a gate to severe torment for them- then they will be plunged into utter despair.

M.A.S. Abdel Haleem

அவர்கள் மீது கடினமான வேதனையின் ஒரு வாயிலைத் திறந்து விட்டாலோ அவர்கள் திடுக்கிட்டுத் தங்கள் நம்பிக்கையை முற்றிலும் இழந்து விடுகின்றனர்.

Abdul Hameed Baqavi

وَهُوَ ٱلَّذِىٓ أَنشَأَ لَكُمُ ٱلسَّمْعَ وَٱلْأَبْصَـٰرَ وَٱلْأَفْـِٔدَةَ ۚ قَلِيلًا مَّا تَشْكُرُونَ

It is God who endowed you with hearing, sight, and hearts- how seldom you are grateful!

M.A.S. Abdel Haleem

அவன்தான் உங்களுக்குச் செவி, பார்வை, உள்ளம் ஆகியவற்றைக் கொடுத்தவன். (இவ்வாறிருந்தும்) அவனுக்கு நீங்கள் வெகு சொற்பமாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.

Abdul Hameed Baqavi

وَهُوَ ٱلَّذِى ذَرَأَكُمْ فِى ٱلْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ

It is He who made you multiply on earth. It is to Him that you will be gathered:

M.A.S. Abdel Haleem

அவன்தான் உங்களைப் பூமியில் (பல பாகங்களிலும்) பரந்து (வசிக்க வைத்து) பெருகச் செய்கிறான். (மரணித்த பின்னரும்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.

Abdul Hameed Baqavi

وَهُوَ ٱلَّذِى يُحْىِۦ وَيُمِيتُ وَلَهُ ٱخْتِلَـٰفُ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ ۚ أَفَلَا تَعْقِلُونَ

it is He who gives life and death; the alternation of night and day depends on Him; will you not use your minds?

M.A.S. Abdel Haleem

அவனே உயிர் கொடுக்கிறான்; மரணிக்கவும் செய்விக்கிறான். இரவு பகல் மாறி மாறி வருவதும் அவனுடைய கட்டளையினாலேயே! இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

Abdul Hameed Baqavi

بَلْ قَالُوا۟ مِثْلَ مَا قَالَ ٱلْأَوَّلُونَ

But, like others before them,

M.A.S. Abdel Haleem

என்னே! இவர்களுக்கு முன்னிருந்தவர்கள் கூறியவாறே இவர்களும் கூறுகின்றனர்.

Abdul Hameed Baqavi

قَالُوٓا۟ أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ

they say, ‘What? When we die and turn to dust and bones, shall we really be resurrected?

M.A.S. Abdel Haleem

(அதாவது:) ‘‘ நாம் மரணித்து எலும்பாகவும் உக்கி மண்ணாகவும் போனதன் பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப்படுவோமா?'' என்று (அவர்கள் கூறியவாறே இவர்களும்) கூறுகின்றனர்.

Abdul Hameed Baqavi

لَقَدْ وُعِدْنَا نَحْنُ وَءَابَآؤُنَا هَـٰذَا مِن قَبْلُ إِنْ هَـٰذَآ إِلَّآ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ

We have heard such promises before, and so did our forefathers. These are just ancient fables.’

M.A.S. Abdel Haleem

‘‘ நிச்சயமாக நாமும் நம் மூதாதைகளும் இவ்வாறே பயமுறுத்தப்பட்டோம். இது முன்னுள்ளவர்களின் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை'' (என்றும் கூறுகின்றனர்.)

Abdul Hameed Baqavi

قُل لِّمَنِ ٱلْأَرْضُ وَمَن فِيهَآ إِن كُنتُمْ تَعْلَمُونَ

Say [Prophet], ‘Who owns the earth and all who live in it, if you know [so much]?’

M.A.S. Abdel Haleem

(ஆகவே நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘பூமியும் அதில் உள்ளவையும் யாருக்குரியன? நீங்கள் அறிந்திருந்தால் கூறுங்கள்'' எனக் கேட்பீராக.

Abdul Hameed Baqavi

سَيَقُولُونَ لِلَّهِ ۚ قُلْ أَفَلَا تَذَكَّرُونَ

and they will reply, ‘God.’ Say, ‘Will you not take heed?’

M.A.S. Abdel Haleem

அதற்கவர்கள் ‘‘அல்லாஹ்வுக்குரியனவே'' என்று கூறுவார்கள். (அவ்வாறாயின் இதைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சிப் பெறமாட்டீர்களா? என்று கேட்பீராக.

Abdul Hameed Baqavi

قُلْ مَن رَّبُّ ٱلسَّمَـٰوَٰتِ ٱلسَّبْعِ وَرَبُّ ٱلْعَرْشِ ٱلْعَظِيمِ

Say, ‘Who is the Lord of the seven heavens? Who is the Lord of the Mighty Throne?’

M.A.S. Abdel Haleem

‘‘ ஏழு வானங்களுக்கும், மகத்தான அர்ஷுக்கும் சொந்தக்காரன் யார்?'' என்று கேட்பீராக.

Abdul Hameed Baqavi

سَيَقُولُونَ لِلَّهِ ۚ قُلْ أَفَلَا تَتَّقُونَ

and they will reply, ‘God.’ Say, ‘Will you not be mindful?’

M.A.S. Abdel Haleem

அதற்கவர்கள் ‘‘அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே'' என்று கூறுவார்கள். ‘‘அவ்வாறாயின் நீங்கள் அவனுக்குப் பயப்பட வேண்டாமா?'' என்று கேட்பீராக.

Abdul Hameed Baqavi

قُلْ مَنۢ بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَىْءٍ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِن كُنتُمْ تَعْلَمُونَ

Say, ‘Who holds control of everything in His hand? Who protects, while there is no protection against Him, if you know [so much]?’

M.A.S. Abdel Haleem

‘‘ எல்லா பொருள்களின் அதிகாரம் யார் கையில் இருக்கிறது? யார் (அனைவரையும்) பாதுகாக்கிறான். அவனை ஒருவரும் பாதுகாப்பதில்லை. நீங்கள் அறிந்திருந்தால் (அவன் யார் எனக் கூறுங்கள்)'' எனக் கேட்பீராக.

Abdul Hameed Baqavi

سَيَقُولُونَ لِلَّهِ ۚ قُلْ فَأَنَّىٰ تُسْحَرُونَ

and they will reply, ‘God.’ Say, ‘Then how can you be so deluded?’

M.A.S. Abdel Haleem

அதற்கவர்கள் (எல்லா அதிகாரங்களும்) ‘‘அல்லாஹ்வுக்குரியனதான்'' என்று கூறுவார்கள். ‘‘அவ்வாறாயின் நீங்கள் எவ்வாறு உங்கள் அறிவை இழந்து விட்டீர்கள்?'' என்று கேட்பீராக.

Abdul Hameed Baqavi

بَلْ أَتَيْنَـٰهُم بِٱلْحَقِّ وَإِنَّهُمْ لَكَـٰذِبُونَ

The fact is, We brought them the truth and they are lying.

M.A.S. Abdel Haleem

நாம் அவர்களுக்கு சத்தியத்தையே கொடுத்திருந்தோம். (இதை மறுத்துக் கூறும்) அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே!

Abdul Hameed Baqavi

مَا ٱتَّخَذَ ٱللَّهُ مِن وَلَدٍ وَمَا كَانَ مَعَهُۥ مِنْ إِلَـٰهٍ ۚ إِذًا لَّذَهَبَ كُلُّ إِلَـٰهٍۭ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ ۚ سُبْحَـٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ

God has never had a child. Nor is there any god beside Him- if there were, each god would have taken his creation aside and tried to overcome the others. May God be exalted above what they describe!

M.A.S. Abdel Haleem

அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொள்ளவில்லை. அவனுடன் வணக்கத்திற்குரிய வேறு இறைவனுமில்லை. அவ்வாறாயின் ஒவ்வொரு இறைவனும் தான் படைத்தவற்றைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, ஒருவர் மற்றவர் மீது போர் புரிய ஆரம்பித்து விடுவர். (நிராகரிக்கும்) இவர்கள் வர்ணிக்கும் இத்தகைய வர்ணிப்புகளை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.

Abdul Hameed Baqavi

عَـٰلِمِ ٱلْغَيْبِ وَٱلشَّهَـٰدَةِ فَتَعَـٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ

He knows what is not seen as well as what is seen; He is far above any partner they claim for Him.

M.A.S. Abdel Haleem

அவன் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன். இவர்கள் இணைவைப்பவற்றை விட அல்லாஹ் மிக்க மேலானவன்.

Abdul Hameed Baqavi

قُل رَّبِّ إِمَّا تُرِيَنِّى مَا يُوعَدُونَ

Say, ‘Lord, if You are going to show me the punishment You have promised them,

M.A.S. Abdel Haleem

‘‘என் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களிக்கும் வேதனையை நீ எனக்கு காண்பிப்பதாயின்,

Abdul Hameed Baqavi

رَبِّ فَلَا تَجْعَلْنِى فِى ٱلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ

then Lord, do not include me among the evildoers!’

M.A.S. Abdel Haleem

என் இறைவனே! (அச்சமயம்) இந்த அநியாயக்கார மக்களுடன் என்னை நீ சேர்த்து விடாதே'' என்று (நபியே!) பிரார்த்திப்பீராக.

Abdul Hameed Baqavi

وَإِنَّا عَلَىٰٓ أَن نُّرِيَكَ مَا نَعِدُهُمْ لَقَـٰدِرُونَ

We certainly are able to show you the punishment We have promised them.

M.A.S. Abdel Haleem

ஏனென்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு வாக்களித்திருக்கும் வேதனையை உமக்குக் காண்பிக்கவும் ஆற்றலுடையவர்கள் ஆவோம்.

Abdul Hameed Baqavi

ٱدْفَعْ بِٱلَّتِى هِىَ أَحْسَنُ ٱلسَّيِّئَةَ ۚ نَحْنُ أَعْلَمُ بِمَا يَصِفُونَ

Repel evil with good- We are well aware of what they attribute to Us-

M.A.S. Abdel Haleem

(நபியே!) தீமையை மிக அழகியதைக் கொண்டே நீர் தடுத்துக் கொள்வீராக. அவர்கள் (உம்மைப் பற்றிக்) கூறுவதை நாம் நன்கறிவோம்.

Abdul Hameed Baqavi

وَقُل رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَٰتِ ٱلشَّيَـٰطِينِ

and say, ‘Lord, I take refuge with You from the goadings of the evil ones;

M.A.S. Abdel Haleem

‘‘ என் இறைவனே! (பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டும்) ஷைத்தான்களுடைய தூண்டுதல்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்படி நான் உன்னிடம் கோருகிறேன்.

Abdul Hameed Baqavi

وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ

I seek refuge with you, Lord, so that they may not come near me.’

M.A.S. Abdel Haleem

என் இறைவனே! ஷைத்தான்கள் என்னிடம் வராமலிருக்கவும் நான் உன்னிடம் கோருகிறேன்'' என்று (நபியே!) பிரார்த்தித்துக் கொண்டிருப்பீராக.

Abdul Hameed Baqavi

حَتَّىٰٓ إِذَا جَآءَ أَحَدَهُمُ ٱلْمَوْتُ قَالَ رَبِّ ٱرْجِعُونِ

When death comes to one of them, he cries, ‘My Lord, let me return

M.A.S. Abdel Haleem

(நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்களில் எவனுக்கும் மரணம் வந்தாலோ (அவன் தன் இறைவனை நோக்கி) ‘‘ என் இறைவனே! என்னை (உலகத்திற்கு) திரும்ப அனுப்பிவிடு.

Abdul Hameed Baqavi

لَعَلِّىٓ أَعْمَلُ صَـٰلِحًا فِيمَا تَرَكْتُ ۚ كَلَّآ ۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآئِلُهَا ۖ وَمِن وَرَآئِهِم بَرْزَخٌ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ

so as to make amends for the things I neglected.’ Never! This will not go beyond his words: a barrier stands behind such people until the very Day they are resurrected.

M.A.S. Abdel Haleem

நான் விட்டு வந்த அ(ந்த உலகத்)தில் (இனி) நல்ல காரியங்களையே நான் செய்து கொண்டிருப்பேன்'' என்று கூறுவான். (எனினும்,) அது ஆகக்கூடிய காரியமன்று. (இத்தகைய சந்தர்ப்பங்களில்) அவன் கூறக்கூடியது வெறும் வார்த்தையே (தவிர வேறில்லை). அவர்களுக்கு முன் ஓர் அரண் ஏற்பட்டு விடும். (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரை அதில் தங்கிவிடுவார்கள்.

Abdul Hameed Baqavi

فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ فَلَآ أَنسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَآءَلُونَ

On that Day when the Trumpet is blown, the ties between them will be as nothing and they will not ask about each other:

M.A.S. Abdel Haleem

சூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையில் பந்துத்துவம் இருக்காது. ஒருவரின் (சுக துக்க) செய்தியை மற்றொருவர் விசாரிக்கவும் மாட்டார். (தத்தம் கவலையே பெரிதாக இருக்கும்.)

Abdul Hameed Baqavi

فَمَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ

those whose good deeds weigh heavy will be successful,

M.A.S. Abdel Haleem

ஆகவே, எவர்களுடைய நன்மையின் எடைகள் கணக்கிறதோ அவர்கள்தான் வெற்றி அடைவார்கள்.

Abdul Hameed Baqavi

وَمَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ فَأُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ فِى جَهَنَّمَ خَـٰلِدُونَ

but those whose balance is light will have lost their souls for ever and will stay in Hell-

M.A.S. Abdel Haleem

எவர்களுடைய (நன்மையின்) எடைகள் குறைகிறதோ அவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டு எந்நாளுமே நரகத்தில் தங்கிவிடுவார்கள்.

Abdul Hameed Baqavi

تَلْفَحُ وُجُوهَهُمُ ٱلنَّارُ وَهُمْ فِيهَا كَـٰلِحُونَ

the Fire will scorch their faces and their lips will be twisted in pain.

M.A.S. Abdel Haleem

அவர்களுடைய முகங்களை (நரகத்தின்) நெருப்புப் பொசுக்கும். அதில் அவர்களுடைய (உதடுகளெல்லாம் வெந்து சுருண்டு) முகம் விகாரமாக இருக்கும்.

Abdul Hameed Baqavi

أَلَمْ تَكُنْ ءَايَـٰتِى تُتْلَىٰ عَلَيْكُمْ فَكُنتُم بِهَا تُكَذِّبُونَ

‘Were My messages not recited over and over to you and still you rejected them?’

M.A.S. Abdel Haleem

(அவர்களை நோக்கி) “உங்கள் மீது எனது வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அவற்றை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டே இருந்தீர்கள்'' (என்று கூறப்படும்.)

Abdul Hameed Baqavi

قَالُوا۟ رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَآلِّينَ

They will say, ‘Lord, our waywardness overcame us and we went astray.

M.A.S. Abdel Haleem

அதற்கவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்கள் துரதிர்ஷ்டம் எங்களை மீறிவிட்டது. ஆதலால் நாங்கள் வழிகெட்ட மக்களாக இருந்தோம்'' என்று கூறுவார்கள்.

Abdul Hameed Baqavi

رَبَّنَآ أَخْرِجْنَا مِنْهَا فَإِنْ عُدْنَا فَإِنَّا ظَـٰلِمُونَ

Lord, take us away from this and if we go back to our old ways, then we shall really be evildoers.’

M.A.S. Abdel Haleem

‘‘எங்கள் இறைவனே! இ(ந்த நரகத்)திலிருந்து எங்களை வெளியேற்றி விடு. மீண்டும் நாங்கள் (பாவத்திற்கு) திரும்பினால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்'' (என்பார்கள்).

Abdul Hameed Baqavi

قَالَ ٱخْسَـُٔوا۟ فِيهَا وَلَا تُكَلِّمُونِ

He will say, ‘Away with you! In you go! Do not speak to Me!

M.A.S. Abdel Haleem

அதற்கவன் கூறுவான்: ‘‘அதிலேயே சிறுமைப்பட்டுக் கிடங்கள். நீங்கள் என்னுடன் பேசாதீர்கள்.''

Abdul Hameed Baqavi

إِنَّهُۥ كَانَ فَرِيقٌ مِّنْ عِبَادِى يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَا وَأَنتَ خَيْرُ ٱلرَّٰحِمِينَ

Among My servants there were those who said, “Lord, We believe. Forgive us and have mercy on us: You are the most merciful of all.”

M.A.S. Abdel Haleem

நிச்சயமாக நம் அடியார்களில் ஒரு வகுப்பார் இருந்தனர். அவர்கள் (என்னை நோக்கி) ‘‘ எங்கள் இறைவனே! நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கிறோம். நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது அருள் புரிவாயாக! அருள் புரிபவர்களிலெல்லாம் நீ மிக்க மேலானவன்'' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.

Abdul Hameed Baqavi

فَٱتَّخَذْتُمُوهُمْ سِخْرِيًّا حَتَّىٰٓ أَنسَوْكُمْ ذِكْرِى وَكُنتُم مِّنْهُمْ تَضْحَكُونَ

But you kept on laughing at them: so intent were you on laughing at them that it made you forget My warning.

M.A.S. Abdel Haleem

ஆனால் நீங்களோ என் நினைவை முற்றிலும் மறந்துவிட்டு அவர்களைப் பரிகசித்து அவர்களைப் பற்றிச் சிரித்துக் கொண்டிருந்தீர்கள்.

Abdul Hameed Baqavi

إِنِّى جَزَيْتُهُمُ ٱلْيَوْمَ بِمَا صَبَرُوٓا۟ أَنَّهُمْ هُمُ ٱلْفَآئِزُونَ

Today I have rewarded them for their patience: it is they who will succeed.’

M.A.S. Abdel Haleem

(உங்கள் பரிகாசத்தை) அவர்கள் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக இன்றைய தினம் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நற்கூலி கொடுத்தோம். மெய்யாகவே அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்.''

Abdul Hameed Baqavi

قَـٰلَ كَمْ لَبِثْتُمْ فِى ٱلْأَرْضِ عَدَدَ سِنِينَ

He will say, ‘How many years were you on earth?’

M.A.S. Abdel Haleem

‘‘ நீங்கள் பூமியில் எத்தனை வருடங்கள் இருந்தீர்கள்?'' என அவன் கேட்பான்.

Abdul Hameed Baqavi

قَالُوا۟ لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ فَسْـَٔلِ ٱلْعَآدِّينَ

and they will reply, ‘We stayed a day or a part of a day, but ask those who keep count.’

M.A.S. Abdel Haleem

அதற்கவர்கள் ‘‘ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றி) கணக்கு வைத்திருப்பவர்களை நீ கேட்பாயாக!'' எனக் கூறுவார்கள்.

Abdul Hameed Baqavi

قَـٰلَ إِن لَّبِثْتُمْ إِلَّا قَلِيلًا ۖ لَّوْ أَنَّكُمْ كُنتُمْ تَعْلَمُونَ

He will say, ‘You stayed but a little, if you had only known.

M.A.S. Abdel Haleem

அதற்கவன் ‘‘ ஒரு சொற்ப காலத்தைத் தவிர (பூமியில் அதிக காலம்) நீங்கள் தங்கவில்லை. இதை முன்னதாகவே நீங்கள் அறிந்திருக்க வேண்டாமா?'' என்று கூறுவான்.

Abdul Hameed Baqavi

أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَـٰكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ

Did you think We had created you in vain, and that you would not be brought back to Us?’

M.A.S. Abdel Haleem

(‘‘என்னே!) நாம் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?'' (என்று கேட்பான்.)

Abdul Hameed Baqavi

فَتَعَـٰلَى ٱللَّهُ ٱلْمَلِكُ ٱلْحَقُّ ۖ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلْعَرْشِ ٱلْكَرِيمِ

Exalted be God, the true King, there is no god but Him, the Lord of the Glorious Throne!

M.A.S. Abdel Haleem

ஆகவே, மெய்யான அரசனாகிய அல்லாஹ் மிக்க உயர்ந்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் அறவே இல்லை. கண்ணியமிக்க அர்ஷுக்குச் சொந்தக்காரன் அவனே!

Abdul Hameed Baqavi

وَمَن يَدْعُ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَ لَا بُرْهَـٰنَ لَهُۥ بِهِۦ فَإِنَّمَا حِسَابُهُۥ عِندَ رَبِّهِۦٓ ۚ إِنَّهُۥ لَا يُفْلِحُ ٱلْكَـٰفِرُونَ

Whoever prays to another god alongside Him- a god for whose existence he has no evidence- will face his reckoning with his Lord. Those who reject the truth will not prosper.

M.A.S. Abdel Haleem

(நபியே!) எவன் அல்லாஹ்வுடன் வேறு ஓர் இறைவனை அழைக்கிறானோ அவனிடத்தில் அதற்குரிய ஓர் அத்தாட்சியும் இல்லை. அவனுடைய (பாவக்) கணக்கு அவனுடைய இறைவனிடத்தில்தான் (தீர்க்கப்படும்). நிச்சயமாக (உண்மையை) நிராகரிப்பவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.

Abdul Hameed Baqavi

وَقُل رَّبِّ ٱغْفِرْ وَٱرْحَمْ وَأَنتَ خَيْرُ ٱلرَّٰحِمِينَ

Say [Prophet], ‘Lord, forgive and have mercy: You are the most merciful of all.’

M.A.S. Abdel Haleem

(நபியே!) கூறுவீராக: என் இறைவனே! நீ (என்னை) மன்னித்துக் கருணை செய்வாயாக! கருணை செய்பவர்களிலெல்லாம் நீதான் மிக்க மேலானவன்.

Abdul Hameed Baqavi

Al-Mu'minun (The Believers) · 118 verses