العنكبوت

Al-'Ankabut (The Spider)

Meccan · 69 verses

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

Reading settings
28
16

الٓمٓ

Alif Lam Mim

M.A.S. Abdel Haleem

அலிஃப் லாம் மீம்.

Abdul Hameed Baqavi

أَحَسِبَ ٱلنَّاسُ أَن يُتْرَكُوٓا۟ أَن يَقُولُوٓا۟ ءَامَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ

Do people think they will be left alone after saying ‘We believe’ without being put to the test?

M.A.S. Abdel Haleem

மனிதர்கள் ‘‘ நாங்கள் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதைப் பற்றி) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா?

Abdul Hameed Baqavi

وَلَقَدْ فَتَنَّا ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۖ فَلَيَعْلَمَنَّ ٱللَّهُ ٱلَّذِينَ صَدَقُوا۟ وَلَيَعْلَمَنَّ ٱلْكَـٰذِبِينَ

We tested those who went before them: God will certainly mark out which ones are truthful and which are lying.

M.A.S. Abdel Haleem

இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கிறோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறுகின்ற) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்து கொள்வான்.

Abdul Hameed Baqavi

أَمْ حَسِبَ ٱلَّذِينَ يَعْمَلُونَ ٱلسَّيِّـَٔاتِ أَن يَسْبِقُونَا ۚ سَآءَ مَا يَحْكُمُونَ

Do the evildoers think they can escape us? How ill they judge!

M.A.S. Abdel Haleem

அல்லது பாவங்களைச் செய்பவர்கள் (தண்டனை அடையாது) நம்மை விட்டுத் தப்பித்துக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் இதைப் பற்றிய) அவர்களுடைய தீர்மானம் மகா கெட்டது.

Abdul Hameed Baqavi

مَن كَانَ يَرْجُوا۟ لِقَآءَ ٱللَّهِ فَإِنَّ أَجَلَ ٱللَّهِ لَـَٔاتٍ ۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

But as for those who strive for their meeting with God, God’s appointed time is bound to come; He is the All Hearing, the All Knowing.

M.A.S. Abdel Haleem

எவர்கள் அல்லாஹ்வைச் சந்திப்போம் என நம்புகிறார்களோ அவர்கள் (அதற்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால்) அதற்காக அல்லாஹ் ஏற்படுத்திய தவணை நிச்சயமாக வந்தே தீரும். அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவான்.

Abdul Hameed Baqavi

وَمَن جَـٰهَدَ فَإِنَّمَا يُجَـٰهِدُ لِنَفْسِهِۦٓ ۚ إِنَّ ٱللَّهَ لَغَنِىٌّ عَنِ ٱلْعَـٰلَمِينَ

Those who exert themselves do so for their own benefit––God does not need His creatures––

M.A.S. Abdel Haleem

(அல்லாஹ்வுடைய வழியில்) எவரேனும் கடின முயற்சி மேற்கொண்டால், நிச்சயமாக அவர் தன் நலனுக்காகவே முயன்றவராகிறார். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் (உதவி) தேவையற்றவன்.

Abdul Hameed Baqavi

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَنُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَلَنَجْزِيَنَّهُمْ أَحْسَنَ ٱلَّذِى كَانُوا۟ يَعْمَلُونَ

We shall certainly blot out the misdeeds of those who believe and do good deeds, and We shall reward them according to the best of their actions.

M.A.S. Abdel Haleem

ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய பாவத்திற்கு (அவற்றைப்) பரிகாரமாக்கி வைத்து அவர்கள் செய்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.

Abdul Hameed Baqavi

وَوَصَّيْنَا ٱلْإِنسَـٰنَ بِوَٰلِدَيْهِ حُسْنًا ۖ وَإِن جَـٰهَدَاكَ لِتُشْرِكَ بِى مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌ فَلَا تُطِعْهُمَآ ۚ إِلَىَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

We have commanded people to be good to their parents, but do not obey them if they strive to make you serve, beside Me, anything of which you have no knowledge: you will all return to Me, and I shall inform you of what you have done.

M.A.S. Abdel Haleem

தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கிறோம். (எனினும், கடவுள் என்பதற்கு) எவ்வித ஆதாரமும் இல்லாதவற்றை எனக்கு இணையாக்கும்படி (மனிதனே!) அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விஷயத்தில்) நீ அவர்களுக்கு கீழ்ப்படியாதே! என்னிடமே நீங்கள் திரும்ப வேண்டியதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி (நன்மையா தீமையா என்பதை) அச்சமயம் நான் உங்களுக்கு அறிவித்துவிடுவேன்.

Abdul Hameed Baqavi

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَنُدْخِلَنَّهُمْ فِى ٱلصَّـٰلِحِينَ

We shall be sure to admit those who believe and do good deeds to the ranks of the righteous.

M.A.S. Abdel Haleem

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நல்லவர்களுடன் சேர்த்துவிடுவோம்.

Abdul Hameed Baqavi

وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ فَإِذَآ أُوذِىَ فِى ٱللَّهِ جَعَلَ فِتْنَةَ ٱلنَّاسِ كَعَذَابِ ٱللَّهِ وَلَئِن جَآءَ نَصْرٌ مِّن رَّبِّكَ لَيَقُولُنَّ إِنَّا كُنَّا مَعَكُمْ ۚ أَوَلَيْسَ ٱللَّهُ بِأَعْلَمَ بِمَا فِى صُدُورِ ٱلْعَـٰلَمِينَ

There are some people who say, ‘We believe in God,’ but, when they suffer for His cause, they think that human persecution is as severe as God’s punishment––yet, if any help comes to you [Prophet] from your Lord, they will say, ‘We have always been with you’. Does God not know best what is in everyone’s hearts?

M.A.S. Abdel Haleem

மனிதர்களில் சிலர் இருக்கின்றனர்: அவர்கள் ‘‘ நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறோம்'' என்று கூறுகின்றனர். எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வழியில் ஏதும் துன்பம் ஏற்பட்டால், மக்களால் ஏற்படும் அத்துன்பத்தை அல்லாஹ்வுடைய வேதனையைப் போல் (மிகப் பெரிதாக) ஆக்கி (உங்களிடமிருந்து விலகி)க் கொள்(ள விரும்பு)கின்றனர். உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஒரு உதவி கிடைத்தால் ‘‘ நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருந்தோம்'' என்று கூறுகின்றனர். உலகத்தாரின் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இல்லையா?

Abdul Hameed Baqavi

وَلَيَعْلَمَنَّ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَلَيَعْلَمَنَّ ٱلْمُنَـٰفِقِينَ

God will be sure to mark out which ones are the believers, and which the hypocrites.

M.A.S. Abdel Haleem

ஆகவே, இவர்களில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்கள் எவர்கள் என்பதையும் அவன் நன்கறிவான்.

Abdul Hameed Baqavi

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّبِعُوا۟ سَبِيلَنَا وَلْنَحْمِلْ خَطَـٰيَـٰكُمْ وَمَا هُم بِحَـٰمِلِينَ مِنْ خَطَـٰيَـٰهُم مِّن شَىْءٍ ۖ إِنَّهُمْ لَكَـٰذِبُونَ

Those who disbelieve say to the believers, ‘Follow our path and we shall bear [the consequences for] your sins,’ yet they will not do so––they are liars.

M.A.S. Abdel Haleem

நிராகரிப்பவர்கள், நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘ நீங்கள் எங்கள் வழியைப் பின்பற்றுங்கள். (அதனால் ஏதும் குற்றங்குறைகள் ஏற்பட்டால்) உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம்'' என்று கூறுகின்றனர். எனினும், அவர்களின் (நம்பிக்கையாளர்களின்) குற்றங்களிலிருந்து எதையுமே அவர்கள் (-நிராகரிப்பவர்கள்) சுமந்துகொள்ள மாட்டார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே!

Abdul Hameed Baqavi

وَلَيَحْمِلُنَّ أَثْقَالَهُمْ وَأَثْقَالًا مَّعَ أَثْقَالِهِمْ ۖ وَلَيُسْـَٔلُنَّ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ عَمَّا كَانُوا۟ يَفْتَرُونَ

They will bear their own burdens and others besides: they will be questioned about their false assertions on the Day of Resurrection.

M.A.S. Abdel Haleem

ஆயினும், அவர்கள் தங்கள் பாவச் சுமைகளையும் இன்னும் தங்கள் பாவச் சுமைகளுடன் (மனிதர்களை வழி கெடுத்த) பாவச்சுமைகளையும் நிச்சயமாக சுமப்பார்கள். மேலும், அவர்கள் இவ்வாறு பொய்யாகக் கற்பனை செய்து கூறிக்கொண்டிருந்ததைப் பற்றியும் நிச்சயமாக அவர்கள் மறுமை நாளில் கேட்கப்படுவார்கள்.

Abdul Hameed Baqavi

وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِۦ فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا خَمْسِينَ عَامًا فَأَخَذَهُمُ ٱلطُّوفَانُ وَهُمْ ظَـٰلِمُونَ

We sent Noah out to his people. He lived among them for fifty years short of a thousand but when the Flood overwhelmed them they were still doing evil.

M.A.S. Abdel Haleem

நூஹ் நபியை நம் தூதராக அவருடைய மக்களிடம் நாம் அனுப்பி வைத்தோம். அவர் ஐம்பது குறைய ஓராயிரம் வருடங்கள் அவர்களிடையே இருந்தார். (இவ்வளவு காலமிருந்தும் அவரை அவருடைய மக்களில் சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இவ்வாறு) அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்ததனால் வெள்ளப் பிரளயம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.

Abdul Hameed Baqavi

فَأَنجَيْنَـٰهُ وَأَصْحَـٰبَ ٱلسَّفِينَةِ وَجَعَلْنَـٰهَآ ءَايَةً لِّلْعَـٰلَمِينَ

We saved him and those with him on the Ark. We made this a sign for all people.

M.A.S. Abdel Haleem

எனினும், அவரையும் (அவருடைய) கப்பலில் இருந்தவர்களையும் நாம் பாதுகாத்துக் கொண்டு இச்சம்பவத்தை உலகத்தாருக்கு நாம் ஒரு படிப்பினையாக ஆக்கினோம்.

Abdul Hameed Baqavi

وَإِبْرَٰهِيمَ إِذْ قَالَ لِقَوْمِهِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ وَٱتَّقُوهُ ۖ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

We also sent Abraham. He said to his people, ‘Serve God and be mindful of Him: that is better for you, if only you knew.

M.A.S. Abdel Haleem

இப்றாஹீமை (நம் தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பிவைத்த சமயத்தில்) அவர் தன் மக்களை நோக்கி ‘‘ நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்கி அவனையே நீங்கள் அஞ்சி நடங்கள். நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் இதுவே உங்களுக்கு மிக்க நல்லதாகும்'' (என்பதை அறிந்து கொள்வீர்கள்).

Abdul Hameed Baqavi

إِنَّمَا تَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ أَوْثَـٰنًا وَتَخْلُقُونَ إِفْكًا ۚ إِنَّ ٱلَّذِينَ تَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ لَا يَمْلِكُونَ لَكُمْ رِزْقًا فَٱبْتَغُوا۟ عِندَ ٱللَّهِ ٱلرِّزْقَ وَٱعْبُدُوهُ وَٱشْكُرُوا۟ لَهُۥٓ ۖ إِلَيْهِ تُرْجَعُونَ

What you worship instead of God are mere idols; what you invent is nothing but falsehood. Those you serve instead of God have no power to give you provisions, so seek provisions from God, serve Him, and give Him thanks: you will all be returned to Him.

M.A.S. Abdel Haleem

தவிர, அல்லாஹ்வை அன்றி சிலைகளைத்தான் நீங்கள் வணங்குகிறீர்கள். நீங்கள் பொய்யை கற்பனை செய்கிறீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கும் இவை உங்களுக்கு உணவளிக்க சிறிதும் சக்தியற்றவை. ஆகவே, (உங்களுக்கு வேண்டிய) உணவை அல்லாஹ்விடமே கோரி, அவ(ன் ஒருவ)னையே வணங்கி, அவனுக்கு நன்றி செலுத்தியும் வாருங்கள். அவனிடமே நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள்'' என்றும் கூறினார்.

Abdul Hameed Baqavi

وَإِن تُكَذِّبُوا۟ فَقَدْ كَذَّبَ أُمَمٌ مِّن قَبْلِكُمْ ۖ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلْبَلَـٰغُ ٱلْمُبِينُ

If you say this is a lie, [be warned that] other communities before you said the same. The messenger’s only duty is to give clear warning.’

M.A.S. Abdel Haleem

(இப்றாஹீமே! மக்களை நோக்கி நீர் கூறுவீராக:) ‘‘ நீங்கள் (என்னைப்) பொய்யாக்கினால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) உங்களுக்கு முன்னுள்ள மக்களும் (தங்களிடம் வந்த தூதர்களை இவ்வாறே) பொய்யாக்கி இருக்கின்றனர். நம் தூதை (மக்களுக்கு)ப் பகிரங்கமாக எடுத்துரைப்பதைத் தவிர அவர்(களை நிர்ப்பந்திப்பது) அத்தூதர் மீது கடமையில்லை.

Abdul Hameed Baqavi

أَوَلَمْ يَرَوْا۟ كَيْفَ يُبْدِئُ ٱللَّهُ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥٓ ۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌ

Do they not see that God brings life into being and reproduces it? Truly this is easy for God.

M.A.S. Abdel Haleem

(ஒன்றுமில்லாதிருந்த) படைப்புகளை அல்லாஹ் எவ்வாறு ஆரம்பத்தில் வெளியாக்கினான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (அவ்வாறே மரணித்த) பின்னரும் அவற்றை மீளவைப்பான். நிச்சயமாக இ(வ்வாறு செய்வ)து அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே!'' (என்று கூறினார்).

Abdul Hameed Baqavi

قُلْ سِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟ كَيْفَ بَدَأَ ٱلْخَلْقَ ۚ ثُمَّ ٱللَّهُ يُنشِئُ ٱلنَّشْأَةَ ٱلْـَٔاخِرَةَ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

Say, ‘Travel throughout the earth and see how He brings life into being: and He will bring the next life into being. God has power over all things.

M.A.S. Abdel Haleem

(மேலும், மனிதர்களை நோக்கிக் கூறும்படி இப்றாஹீமுக்கு கட்டளையிட்டோம்.) கூறுவீராக! பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து பாருங்கள். ஆரம்பத்தில் படைப்புகளை எவ்வாறு உற்பத்தி செய்கிறான். (அவ்வாறே மரணித்த) பின்னரும் அல்லாஹ் (மறுமையில்) மறுமுறையும் உற்பத்தி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுள்ளவன்.

Abdul Hameed Baqavi

يُعَذِّبُ مَن يَشَآءُ وَيَرْحَمُ مَن يَشَآءُ ۖ وَإِلَيْهِ تُقْلَبُونَ

He punishes whoever He will and shows mercy to whoever He will. You will all be returned to Him.

M.A.S. Abdel Haleem

அவன் நாடியவர்களை வேதனை செய்வான்; அவன் நாடியவர்களுக்கு அருள்புரிவான். அவனளவிலேயே நீங்கள் திருப்பப்படுவீர்கள்.''

Abdul Hameed Baqavi

وَمَآ أَنتُم بِمُعْجِزِينَ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ ۖ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِىٍّ وَلَا نَصِيرٍ

You cannot escape Him on earth or in the heavens; you will have no one to protect or help you besides God.’

M.A.S. Abdel Haleem

(அவன் உங்களை வேதனை செய்ய விரும்பினால்) வானத்திலோ பூமியிலோ (ஒளிந்து கொண்டு) நீங்கள் அவனைத் தோற்கடித்துவிட முடியாது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு ஒரு பாதுகாவலனுமில்லை; உதவி செய்பவனுமில்லை.

Abdul Hameed Baqavi

وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَـٰتِ ٱللَّهِ وَلِقَآئِهِۦٓ أُو۟لَـٰٓئِكَ يَئِسُوا۟ مِن رَّحْمَتِى وَأُو۟لَـٰٓئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ

Those who deny God’s Revelation and their meeting with Him have no hope of receiving My grace: they will have a grievous torment.

M.A.S. Abdel Haleem

‘‘ எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்து அவனைச் சந்திப்பதையும் மறுக்கின்றனரோ, அவர்கள் எனது அருளைப் பற்றி நம்பிக்கை இழந்து விடுவார்கள். அவர்களுக்கு நிச்சயமாகத் துன்புறுத்தும் வேதனையுண்டு.''

Abdul Hameed Baqavi

فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِۦٓ إِلَّآ أَن قَالُوا۟ ٱقْتُلُوهُ أَوْ حَرِّقُوهُ فَأَنجَىٰهُ ٱللَّهُ مِنَ ٱلنَّارِ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ

The only answer Abraham’s people gave was, ‘Kill him or burn him!’ but God saved him from the Fire: there truly are signs in this for people who believe.

M.A.S. Abdel Haleem

(இவ்வாறெல்லாம் இப்றாஹீம் நபி தன் மக்களுக்குக் கூறியதற்கு) ‘‘இவரை வெட்டி விடுங்கள்; அல்லது நெருப்பில் எரித்து விடுங்கள்'' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறு விதத்தில்) பதில் கூற அவருடைய மக்களால் முடியாது போயிற்று. (பின்னர் இப்றாஹீமை நெருப்பில் எறிந்தார்கள்.) ஆகவே, (அந்)நெருப்பிலிருந்து அல்லாஹ் அவரை காப்பாற்றினான். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Abdul Hameed Baqavi

وَقَالَ إِنَّمَا ٱتَّخَذْتُم مِّن دُونِ ٱللَّهِ أَوْثَـٰنًا مَّوَدَّةَ بَيْنِكُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ ثُمَّ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ يَكْفُرُ بَعْضُكُم بِبَعْضٍ وَيَلْعَنُ بَعْضُكُم بَعْضًا وَمَأْوَىٰكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن نَّـٰصِرِينَ

Abraham said to them, ‘You have chosen idols instead of God but your love for them will only last for the present life: on the Day of Resurrection, you will disown and reject one another. Hell will be your home and no one will help you.’

M.A.S. Abdel Haleem

(மேலும், இப்றாஹீம் அவர்களை நோக்கி) ‘‘ நீங்கள் அல்லாஹ்வை அன்றி இந்த சிலைகளைத் தெய்வமாக எடுத்துக் கொண்டதற்கெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் உங்களுக்கிடையில் (ஒருவருக்கு மற்றவருடன்) உள்ள சிநேக மனப்பான்மைதான் காரணமாகும். பின்னர், மறுமையிலோ உங்களில் ஒருவர் மற்றவரை நிராகரித்து விட்டு உங்களில் ஒருவர் மற்றவரை (நிந்தித்துச்) சபிப்பார். (முடிவில்) நீங்கள் அனைவரும் செல்லும் இடம் (நரகத்தின்) நெருப்புத்தான். அங்கு உங்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமிரார்'' என்று கூறினார்.

Abdul Hameed Baqavi

۞ فَـَٔامَنَ لَهُۥ لُوطٌ ۘ وَقَالَ إِنِّى مُهَاجِرٌ إِلَىٰ رَبِّىٓ ۖ إِنَّهُۥ هُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ

Lot believed him, and said, ‘I will flee to my Lord: He is the Almighty, the All Wise.’

M.A.S. Abdel Haleem

(இப்றாஹீம் இவ்வளவு கூறியும்) லூத் (நபி) ஒருவர் மட்டுமே அவரை நம்பிக்கை கொண்டார். (ஆகவே, இப்றாஹீம் அவரை நோக்கி) ‘‘ நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (என் இந்த ஊரை விட்டுச்) செல்கிறேன். நிச்சயமாக அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்'' என்று கூறினார்.

Abdul Hameed Baqavi

وَوَهَبْنَا لَهُۥٓ إِسْحَـٰقَ وَيَعْقُوبَ وَجَعَلْنَا فِى ذُرِّيَّتِهِ ٱلنُّبُوَّةَ وَٱلْكِتَـٰبَ وَءَاتَيْنَـٰهُ أَجْرَهُۥ فِى ٱلدُّنْيَا ۖ وَإِنَّهُۥ فِى ٱلْـَٔاخِرَةِ لَمِنَ ٱلصَّـٰلِحِينَ

We gave Isaac and Jacob to Abraham, and placed prophethood and Scripture among his offspring. We gave him his rewards in this world, and in the life to come he will be among the righteous.

M.A.S. Abdel Haleem

ஆகவே, அவருக்கு இஸ்ஹாக்கையும், யஅகூபையும் (சந்ததிகளாகக்) கொடுத்து அவருடைய சந்ததிகளுக்கே நபிப்பட்டத்தையும் வேதத்தையும் சொந்தமாக்கி, அவருக்கு அவருடைய கூலியை இம்மையிலும் கொடுத்தோம். மறுமையிலோ நிச்சயமாக அவர் நல்லவர்களில்தான் இருப்பார்.

Abdul Hameed Baqavi

وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِۦٓ إِنَّكُمْ لَتَأْتُونَ ٱلْفَـٰحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّنَ ٱلْعَـٰلَمِينَ

And Lot: when He said to his people, ‘You practise outrageous acts that no people before you have ever committed.

M.A.S. Abdel Haleem

லூத்தையும் (நம் தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்தோம்.) அவர் தன் மக்களை நோக்கி ‘‘ உங்களுக்கு முன்னர் உலக மனிதர்களில் ஒருவருமே செய்திராத மானக்கேடான ஒரு காரியத்தை நிச்சயமாக நீங்கள் செய்கிறீர்கள்.

Abdul Hameed Baqavi

أَئِنَّكُمْ لَتَأْتُونَ ٱلرِّجَالَ وَتَقْطَعُونَ ٱلسَّبِيلَ وَتَأْتُونَ فِى نَادِيكُمُ ٱلْمُنكَرَ ۖ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِۦٓ إِلَّآ أَن قَالُوا۟ ٱئْتِنَا بِعَذَابِ ٱللَّهِ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ

How can you lust after men, waylay travellers, and commit evil in your gatherings?’ the only answer his people gave was, ‘Bring God’s punishment down on us, if what you say is true.’

M.A.S. Abdel Haleem

(பெண்களை விட்டு விட்டு) ஆண்களிடம் (மோகம் கொண்டு) செல்கிறீர்கள்; (பயணிகளை) வழிமறித்துக் கொள்ளை அடிக்கிறீர்கள். (மக்கள் நிறைந்த) உங்கள் சபைகளிலும் (பகிரங்கமாகவே) மிக்க வெறுக்கத்தக்க காரியத்தைச் செய்கிறீர்களே!'' என்று கூறினார். அதற்கவர்கள் ‘‘ மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் அல்லாஹ்வுடைய வேதனையை எங்களிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறியதைத் தவிர (வேறொன்றும்) அவருடைய மக்கள் பதில் கூறவில்லை.

Abdul Hameed Baqavi

قَالَ رَبِّ ٱنصُرْنِى عَلَى ٱلْقَوْمِ ٱلْمُفْسِدِينَ

So he prayed, ‘My Lord, help me against these people who spread corruption.’

M.A.S. Abdel Haleem

அதற்கவர் ‘‘ என் இறைவனே! விஷமம் செய்யும் இந்த மக்களுக்கு விரோதமாக நீ எனக்கு உதவிபுரிவாயாக!'' என்று பிரார்த்தித்தார்.

Abdul Hameed Baqavi

وَلَمَّا جَآءَتْ رُسُلُنَآ إِبْرَٰهِيمَ بِٱلْبُشْرَىٰ قَالُوٓا۟ إِنَّا مُهْلِكُوٓا۟ أَهْلِ هَـٰذِهِ ٱلْقَرْيَةِ ۖ إِنَّ أَهْلَهَا كَانُوا۟ ظَـٰلِمِينَ

When Our mes-sengers brought the good news [of the birth of a son] to Abraham,they told him, ‘We are about to destroy the people of that town. They are wrongdoers.’

M.A.S. Abdel Haleem

(வானவர்களாகிய) நம் தூதர்கள், இப்றாஹீமுக்கு (இஸ்ஹாக் நபியின் பிறப்பைப் பற்றி) நற்செய்தி கூற அவரிடம் வந்த சமயத்தில் (அவரை நோக்கி ‘‘ லூத்துடைய) இந்த ஊராரை நிச்சயமாக நாங்கள் அழித்துவிடுவோம். ஏனென்றால், நிச்சயமாக அவ்வூரார் (பாவம் செய்வதில் எல்லை கடந்து) அநியாயக்காரர்களாக ஆகிவிட்டார்கள்'' என்று கூறினார்கள்.

Abdul Hameed Baqavi

قَالَ إِنَّ فِيهَا لُوطًا ۚ قَالُوا۟ نَحْنُ أَعْلَمُ بِمَن فِيهَا ۖ لَنُنَجِّيَنَّهُۥ وَأَهْلَهُۥٓ إِلَّا ٱمْرَأَتَهُۥ كَانَتْ مِنَ ٱلْغَـٰبِرِينَ

Abraham said, ‘But Lot lives there.’ They answered, ‘We know who lives there better than you do. We shall save him and his household, except for his wife: she will be one of those who stay behind.’

M.A.S. Abdel Haleem

அதற்கவர் (அவ்வானவர்களை நோக்கி) ‘‘ நிச்சயமாக அதில் லூத்தும் இருக்கிறாரே!'' என்று கூறினார். அதற்கவர்கள் ‘‘ அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம். அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நிச்சயமாக நாங்கள் பாதுகாத்துக் கொள்வோம். அவருடைய மனைவி (அவருடன் செல்லாது அழிந்து போகக்கூடிய அவ்வூராருடன்) தங்கி (அவர்களுடன் அவளும் அழிந்து) விடுவாள்'' என்று கூறினார்கள்.

Abdul Hameed Baqavi

وَلَمَّآ أَن جَآءَتْ رُسُلُنَا لُوطًا سِىٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَقَالُوا۟ لَا تَخَفْ وَلَا تَحْزَنْ ۖ إِنَّا مُنَجُّوكَ وَأَهْلَكَ إِلَّا ٱمْرَأَتَكَ كَانَتْ مِنَ ٱلْغَـٰبِرِينَ

When Our messengers came to Lot, he was troubled and distressed on their account. They said, ‘Have no fear or grief: we shall certainly save you and your household, except for your wife- she will be one of those who stay behind-

M.A.S. Abdel Haleem

பின்னர் நம் (வானவ) தூதர்கள் லூத் (நபி) இடம் வந்தபொழுது, (அவ்வூரார் தீய எண்ணத்துடன் அவர்களைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். அப்போது) அவர், (அந்த வானவர்களை பாதுகாத்துகொள்ள) தன் கையால் ஒன்றும் செய்ய முடியாமல், அவர்களுக்காகத் துக்கித்தார். அதற்கவர்கள், (அவரை நோக்கி) ‘‘ நீர் அஞ்ச வேண்டாம்; துக்கிக்கவும் வேண்டாம். (நாம் இவ்வூராரை அழித்துவிட உமது இறைவனால் அனுப்பப்பட்ட வானவர்களாவோம்.) நிச்சயமாக நாம் உம்மையும், உமது மனைவியைத் தவிர, (மற்ற) உமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்வோம். அவள் (உம்முடன் வராது, இவ்வூராருடன்) தங்கி (அழிந்து) விடுவாள்'' என்று கூறினார்கள்.

Abdul Hameed Baqavi

إِنَّا مُنزِلُونَ عَلَىٰٓ أَهْلِ هَـٰذِهِ ٱلْقَرْيَةِ رِجْزًا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ

and we shall send a punishment from heaven down on the people of this town because they violate [God’s order].’

M.A.S. Abdel Haleem

இவ்வூரார் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் காரணமாக நிச்சயமாக நாம் இவர்கள்மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கிவைப்போம்'' (என்று கூறினார்கள்).

Abdul Hameed Baqavi

وَلَقَد تَّرَكْنَا مِنْهَآ ءَايَةًۢ بَيِّنَةً لِّقَوْمٍ يَعْقِلُونَ

We left some [of the town] there as a clear sign for those who use their reason.

M.A.S. Abdel Haleem

(பின்னர், வானவர்கள் கூறியவாறே அவர்கள் மீது வேதனை இறங்கி அவர்கள் அனைவரும் அழிந்து விட்டனர்.) நிச்சயமாக நாம் அறிவுடைய மக்களுக்குத் தெளிவான அத்தாட்சியை (இன்றளவும்) அவர்கள் இருந்த ஊரில் விட்டு வைத்திருக்கிறோம்.

Abdul Hameed Baqavi

وَإِلَىٰ مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا فَقَالَ يَـٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ وَٱرْجُوا۟ ٱلْيَوْمَ ٱلْـَٔاخِرَ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ

To the people of Midian We sent their brother Shuayb. He said, ‘My people, serve God and think ahead to the Last Day. Do not commit evil and spread corruption in the land.’

M.A.S. Abdel Haleem

மத்யன்வாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நாம் நம் தூதராக அனுப்பிவைத்தோம். அவர் அவர்களை நோக்கி) ‘‘ என் மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். இறுதி நாளை எதிர்பார்த்திருங்கள். பூமியில் விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள்'' என்று கூறினார்.

Abdul Hameed Baqavi

فَكَذَّبُوهُ فَأَخَذَتْهُمُ ٱلرَّجْفَةُ فَأَصْبَحُوا۟ فِى دَارِهِمْ جَـٰثِمِينَ

They rejected him and so the earthquake overtook them. When morning came, they were lying dead in their homes.

M.A.S. Abdel Haleem

எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், அவர்களைப் பூகம்பம் பிடித்துக் கொண்டது. எனவே, அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்துவிட்டனர்.

Abdul Hameed Baqavi

وَعَادًا وَثَمُودَا۟ وَقَد تَّبَيَّنَ لَكُم مِّن مَّسَـٰكِنِهِمْ ۖ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَـٰنُ أَعْمَـٰلَهُمْ فَصَدَّهُمْ عَنِ ٱلسَّبِيلِ وَكَانُوا۟ مُسْتَبْصِرِينَ

[Remember] the tribes of 'Ad and Thamud: their history is made clear to you by [what is left of] their dwelling places. Satan made their foul deeds seem alluring to them and barred them from the right way, though they were capable of seeing.

M.A.S. Abdel Haleem

மேலும், இவ்வாறே ஆது, ஸமூது கூட்டத்தினரையும் (அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக) நாம் அழித்து விட்டோம். (நீங்கள் போகவர உள்ள வழியில்) அவர்கள் இருந்த இடங்கள் உங்களுக்கு நன்றாகவே தென்படுகின்றன. இவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய (பாவச்) செயல்களை ஷைத்தான் அழகாகக் காண்பித்து, நேரான வழியில் செல்லாது அவர்களைத் தடுத்துக் கொண்டான். அவர்கள் நல்லறிவுடையவர்களாகத்தான் இருந்தார்கள். (ஆனால் ஷைத்தானுடைய வலையில் சிக்கி இக்கதிக்கு ஆளானார்கள்.)

Abdul Hameed Baqavi

وَقَـٰرُونَ وَفِرْعَوْنَ وَهَـٰمَـٰنَ ۖ وَلَقَدْ جَآءَهُم مُّوسَىٰ بِٱلْبَيِّنَـٰتِ فَٱسْتَكْبَرُوا۟ فِى ٱلْأَرْضِ وَمَا كَانُوا۟ سَـٰبِقِينَ

[Remember] Qarun and Pharaoh and Haman: Moses brought them clear signs, but they behaved arrogantly on earth. They could not escape Us

M.A.S. Abdel Haleem

காரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (நாம் இவ்வாறே அழித்து விட்டோம்). நிச்சயமாக மூஸா இவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்திருந்தார். எனினும், இவர்கள் (அவற்றை நிராகரித்து விட்டுப்) பூமியில் பெருமை கொண்டு நடந்ததினால் (நம் வேதனைக்கு உள்ளானார்கள். அதில் இருந்து) அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியவில்லை.

Abdul Hameed Baqavi

فَكُلًّا أَخَذْنَا بِذَنۢبِهِۦ ۖ فَمِنْهُم مَّنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُم مَّنْ أَخَذَتْهُ ٱلصَّيْحَةُ وَمِنْهُم مَّنْ خَسَفْنَا بِهِ ٱلْأَرْضَ وَمِنْهُم مَّنْ أَغْرَقْنَا ۚ وَمَا كَانَ ٱللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَـٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ

and We punished each one of them for their sins: some We struck with a violent storm; some were overcome by a sudden blast; some We made the earth swallow; and some We drowned. It was not God who wronged them; they wronged themselves.

M.A.S. Abdel Haleem

அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் (செய்து கொண்டிருந்த) பாவத்தின் காரணமாகவே நாம் பிடித்துக் கொண்டோம். அவர்களில் (ஆது மக்களைப் போன்ற) சிலர் மீது நாம் கல்மழை பொழிந்தோம். அவர்களில் (ஸமூது மக்களைப் போன்ற) சிலரை இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்களில் (காரூன் போன்ற) சிலரை நாம் பூமியில் சொருகி விட்டோம். அவர்களில் (ஃபிர்அவ்ன், ஹாமான் போன்ற) சிலரை (கடலில்) மூழ்கடித்தோம். அல்லாஹ் இவர்களுக்கு அநீதி செய்யவில்லை. எனினும், இவர்கள் (அனைவரும்) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.

Abdul Hameed Baqavi

مَثَلُ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ أَوْلِيَآءَ كَمَثَلِ ٱلْعَنكَبُوتِ ٱتَّخَذَتْ بَيْتًا ۖ وَإِنَّ أَوْهَنَ ٱلْبُيُوتِ لَبَيْتُ ٱلْعَنكَبُوتِ ۖ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ

Those who take protectors other than God can be compared to spiders building themselves houses- the spider’s is the frailest of all houses- if only they could understand.

M.A.S. Abdel Haleem

அல்லாஹ்வையன்றி (மற்றவற்றைத் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்களின் உதாரணம்: நூலாம் பூச்சி கட்டிய வீட்டை(த் தாங்கள் வசிக்க எடுத்துக் கொண்டவர்களின் உதாரணத்தை) ஒத்திருக்கிறது. வீடுகளில் எல்லாம் மிக்க பலவீனமானது நிச்சயமாக நூலாம் பூச்சியின் வீடுதான். (நூலாம் பூச்சியின் வீடு இவர்களை எவ்வாறு பாதுகாக்க முடியாதோ அவ்வாறே இவர்கள் தங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்ட தெய்வங்களும் இவர்களை பாதுகாக்க முடியாது. இதை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே!

Abdul Hameed Baqavi

إِنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا يَدْعُونَ مِن دُونِهِۦ مِن شَىْءٍ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ

God knows what things they call upon beside Him: He is the Mighty, the Wise.

M.A.S. Abdel Haleem

அல்லாஹ்வையன்றி அவர்கள் எவற்றை (கடவுளென) அழைக்கிறார்களோ, அவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (அவற்றுக்கு ஒரு சக்தியுமில்லை; அறிவும் இல்லை.) அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.

Abdul Hameed Baqavi

وَتِلْكَ ٱلْأَمْثَـٰلُ نَضْرِبُهَا لِلنَّاسِ ۖ وَمَا يَعْقِلُهَآ إِلَّا ٱلْعَـٰلِمُونَ

Such are the comparisons We draw for people, though only the wise can grasp them.

M.A.S. Abdel Haleem

மனிதர்களுக்காகவே இவ்வுதாரணங்களை நாம் கூறுகிறோம். (சிந்தித்து அறியக்கூடிய) ஞானமுடையவர்களைத் தவிர (மற்றெவரும்) இதை உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.

Abdul Hameed Baqavi

خَلَقَ ٱللَّهُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً لِّلْمُؤْمِنِينَ

God has created the heavens and earth for a true purpose. There truly is a sign in this for those who believe.

M.A.S. Abdel Haleem

மெய்யாகவே அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான்.(வேறொருவர் இல்லை.) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்சயமாக இவற்றிலும் (பல) அத்தாட்சி(கள்) உண்டு.

Abdul Hameed Baqavi

ٱتْلُ مَآ أُوحِىَ إِلَيْكَ مِنَ ٱلْكِتَـٰبِ وَأَقِمِ ٱلصَّلَوٰةَ ۖ إِنَّ ٱلصَّلَوٰةَ تَنْهَىٰ عَنِ ٱلْفَحْشَآءِ وَٱلْمُنكَرِ ۗ وَلَذِكْرُ ٱللَّهِ أَكْبَرُ ۗ وَٱللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ

[Prophet], recite what has been revealed to you of the Scripture; keep up the prayer: prayer restrains outrageous and unacceptable behaviour. Remembering God is greater: God knows everything you are doing.

M.A.S. Abdel Haleem

(நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்ட இவ்வேதத்தை (மக்களுக்கு) நீர் ஓதிக் காண்பித்து தொழுகையைக் கடைப்பிடித்து வருவீராக. ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும். பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவற்றுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்).

Abdul Hameed Baqavi

۞ وَلَا تُجَـٰدِلُوٓا۟ أَهْلَ ٱلْكِتَـٰبِ إِلَّا بِٱلَّتِى هِىَ أَحْسَنُ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنْهُمْ ۖ وَقُولُوٓا۟ ءَامَنَّا بِٱلَّذِىٓ أُنزِلَ إِلَيْنَا وَأُنزِلَ إِلَيْكُمْ وَإِلَـٰهُنَا وَإِلَـٰهُكُمْ وَٰحِدٌ وَنَحْنُ لَهُۥ مُسْلِمُونَ

[Believers], argue only in the best way with the People of the Book, except with those of them who act unjustly. Say, ‘We believe in what was revealed to us and in what was revealed to you; our God and your God are one [and the same]; we are devoted to Him.’

M.A.S. Abdel Haleem

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் வேதத்தை உடையவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) அழகான முறையிலேயே தவிர அவர்களுடன் தர்க்கிக்க வேண்டாம். ஆயினும், அவர்களில் எவரேனும் வரம்பு மீறிவிட்டால் (அதற்குத் தக்கவாறு நீங்கள் பதில் கூறுவது உங்கள் மீது குற்றமாகாது. அவர்களுடன் தர்க்கித்தால்) ‘‘ எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தை நம்பிக்கை கொள்கின்றபடியே உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். எங்கள் கடவுளும் உங்கள் கடவுளும் ஒரே ஒருவனே. நாங்கள் அவனுக்குத்தான் முற்றிலும் பணிந்து வழிப்பட்டு நடக்கிறோம்'' என்றும் கூறுங்கள்!

Abdul Hameed Baqavi

وَكَذَٰلِكَ أَنزَلْنَآ إِلَيْكَ ٱلْكِتَـٰبَ ۚ فَٱلَّذِينَ ءَاتَيْنَـٰهُمُ ٱلْكِتَـٰبَ يُؤْمِنُونَ بِهِۦ ۖ وَمِنْ هَـٰٓؤُلَآءِ مَن يُؤْمِنُ بِهِۦ ۚ وَمَا يَجْحَدُ بِـَٔايَـٰتِنَآ إِلَّا ٱلْكَـٰفِرُونَ

This is the way We sent the Scripture to you [Muhammad]. Those to whom We had already given Scripture believe in [the Quran] and so do some of these people. No one refuses to acknowledge Our revelations but the defiant.

M.A.S. Abdel Haleem

(நபியே! அவர்களுக்கு வேதத்தை இறக்கிய) அவ்வாறே நாம் உமக்கு இவ்வேதத்தை அருளியிருக்கிறோம். ஆகவே, நாம் எவர்களுக்கு (முன்னர்) வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்க(ளில் உள்ள சத்தியவான்க)ள் இ(வ்வேதத்)தையும் (அவசியம்) நம்பிக்கை கொள்வார்கள். மேலும், (அரபிகளாகிய) இவர்களில் உள்ள (நியாயவாதிகளில்) பலரும் இதை நம்பிக்கை கொள்கின்றனர். (மன முரண்டாக நிராகரிக்கும்) நிராகரிப்பாளர்களைத் தவிர (மற்ற எவரும்) நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.

Abdul Hameed Baqavi

وَمَا كُنتَ تَتْلُوا۟ مِن قَبْلِهِۦ مِن كِتَـٰبٍ وَلَا تَخُطُّهُۥ بِيَمِينِكَ ۖ إِذًا لَّٱرْتَابَ ٱلْمُبْطِلُونَ

You never recited any Scripture before We revealed this one to you; you never wrote one down with your hand. If you had done so, those who follow falsehood might have had cause to doubt.

M.A.S. Abdel Haleem

(நபியே!) நீர் இதற்கு முன்னர் ஒரு வேதத்தை ஓதி அறிந்தவருமல்ல; உமது கையால் நீர் அதை எழுதி(ப் பழகி)யவருமல்ல. அவ்வாறு இருந்திருக்குமாயின், நிராகரிப்பவர்கள் (இதை நீர் தாமாகவே கற்பனை செய்து கொண்டீரே தவிர இறைவனால் அருளப்பட்டதல்ல என்று) சந்தேகம் கொள்ளலாம்.

Abdul Hameed Baqavi

بَلْ هُوَ ءَايَـٰتٌۢ بَيِّنَـٰتٌ فِى صُدُورِ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ ۚ وَمَا يَجْحَدُ بِـَٔايَـٰتِنَآ إِلَّا ٱلظَّـٰلِمُونَ

But no, [this Quran] is a revelation that is clear to the hearts of those endowed with knowledge. No one refuses to acknowledge Our revelations but the evildoers.

M.A.S. Abdel Haleem

அவ்வாறன்று. இது (இறைவனால்தான் அருளப்பட்ட) தெளிவான வசனங்களாக இருக்கின்றன. ஆகவே மெய்யான ஞானம் கொடுக்கப்பட்டவர்களின் உள்ளங்களில் இவை பதிந்துவிடும். ஆகவே, அநியாயக்காரர்களைத் தவிர (மற்றெவரும்) நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.

Abdul Hameed Baqavi

وَقَالُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ ءَايَـٰتٌ مِّن رَّبِّهِۦ ۖ قُلْ إِنَّمَا ٱلْـَٔايَـٰتُ عِندَ ٱللَّهِ وَإِنَّمَآ أَنَا۠ نَذِيرٌ مُّبِينٌ

They say, ‘Why have no miracles been sent to him by his Lord?’ Say, ‘Miracles lie in God’s hands; I am simply here to warn you plainly.’

M.A.S. Abdel Haleem

மேலும், (‘‘ தாங்கள் விரும்புகிறபடி) சில அத்தாட்சிகள் அவருடைய இறைவனால் அவருக்கு அளிக்கப்பட வேண்டாமா?'' என்று (இவ்வக்கிரமக்காரர்கள்) கூறுகின்றனர். அதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘ அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கின்றன. (என்னிடமில்லை) நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன் மட்டும்தான்.''

Abdul Hameed Baqavi

أَوَلَمْ يَكْفِهِمْ أَنَّآ أَنزَلْنَا عَلَيْكَ ٱلْكِتَـٰبَ يُتْلَىٰ عَلَيْهِمْ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَرَحْمَةً وَذِكْرَىٰ لِقَوْمٍ يُؤْمِنُونَ

Do they not think it is enough that We have sent down to you the Scripture that is recited to them? There is a mercy in this and a lesson for believing people.

M.A.S. Abdel Haleem

அவர்கள் மீது ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கி இருப்பது அவர்களுக்கு (அத்தாட்சியால்) போதாதா? ஏனென்றால், இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக (இறைவனுடைய) அருளும் இருக்கிறது; (பல) நல்லுபதேசங்களும் இருக்கின்றன.

Abdul Hameed Baqavi

قُلْ كَفَىٰ بِٱللَّهِ بَيْنِى وَبَيْنَكُمْ شَهِيدًا ۖ يَعْلَمُ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۗ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱلْبَـٰطِلِ وَكَفَرُوا۟ بِٱللَّهِ أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْخَـٰسِرُونَ

Say, ‘God is sufficient witness between me and you: He knows what is in the heavens and earth. Those who believe in false deities and deny God will be the losers.’

M.A.S. Abdel Haleem

(நபியே!) கூறுவீராக: ‘‘ எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கிறான். ஏனென்றால், அவன்தான் வானங்கள் பூமியிலுள்ள அனைத்தையும் நன்கறிந்தவன். ஆகவே, எவர்கள் பொய்யான விஷயங்களை நம்பி அல்லாஹ்வை நிராகரித்து விடுகிறார்களோ அவர்கள்தான் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள்.''

Abdul Hameed Baqavi

وَيَسْتَعْجِلُونَكَ بِٱلْعَذَابِ ۚ وَلَوْلَآ أَجَلٌ مُّسَمًّى لَّجَآءَهُمُ ٱلْعَذَابُ وَلَيَأْتِيَنَّهُم بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ

They challenge you to hasten the punishment: they would already have received a punishment if God had not set a time for it, and indeed it will come to them suddenly and catch them unawares.

M.A.S. Abdel Haleem

(மறுமையின்) வேதனையைப் பற்றி (அது எப்பொழுது வரும்? என்று) அவர்கள் உம்மிடம் அவசரப்படுகின்றனர். அதற்குறிய ஒரு குறிப்பிட்ட தவணை இல்லாதிருந்தால் (இதுவரை) அவ்வேதனை அவர்களை வந்தடைந்தே இருக்கும். எனினும், அவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் திடீரென நிச்சயமாக அவர்களிடம் (அது) வந்தே தீரும்.

Abdul Hameed Baqavi

يَسْتَعْجِلُونَكَ بِٱلْعَذَابِ وَإِنَّ جَهَنَّمَ لَمُحِيطَةٌۢ بِٱلْكَـٰفِرِينَ

They challenge you to hasten the punishment: Hell will encompass all those who deny the truth,

M.A.S. Abdel Haleem

நிராகரிப்பவர்களை நிச்சயமாக நரகம் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையில் வேதனையைப் பற்றி அவர்கள் உம்மிடம் அவசரப் படுகிறார்கள். (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.)

Abdul Hameed Baqavi

يَوْمَ يَغْشَىٰهُمُ ٱلْعَذَابُ مِن فَوْقِهِمْ وَمِن تَحْتِ أَرْجُلِهِمْ وَيَقُولُ ذُوقُوا۟ مَا كُنتُمْ تَعْمَلُونَ

on the Day when punishment overwhelms them from above and from below their very feet, and they will be told, ‘Now taste the punishment for what you used to do.’

M.A.S. Abdel Haleem

அவர்களு(டைய தலைகளு)க்கு மேலிருந்தும், அவர்களு(டைய பாதங்களு)க்குக் கீழிருந்தும் வேதனை அவர்களை மூடிக்கொள்ளும் நாளில் அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் செய்து கொண்டிருந்த செயலின் பயனை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்'' என்று (இறைவன்) கூறுவான்.

Abdul Hameed Baqavi

يَـٰعِبَادِىَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّ أَرْضِى وَٰسِعَةٌ فَإِيَّـٰىَ فَٱعْبُدُونِ

My believing servants! My earth is vast, so worship Me and Me alone.

M.A.S. Abdel Haleem

நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி மிக்க விசாலமானது. அதில் நீங்கள் (எங்கு சென்ற போதிலும்) என்னையே வணங்குங்கள். (மற்றெவரையும் வணங்காதீர்கள்.)

Abdul Hameed Baqavi

كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ ٱلْمَوْتِ ۖ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ

Every soul will taste death, then it is to Us that you will be returned.

M.A.S. Abdel Haleem

(உங்களில் உள்ள) ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை அனுபவிக்க வேண்டியதுதான். பின்னர் நீங்கள் (விசாரணைக்காக) நம்மிடமே கொண்டு வரப்படுவீர்கள்.

Abdul Hameed Baqavi

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَنُبَوِّئَنَّهُم مِّنَ ٱلْجَنَّةِ غُرَفًا تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَا ۚ نِعْمَ أَجْرُ ٱلْعَـٰمِلِينَ

We shall lodge those who believed and did good deeds in lofty dwellings, in the Garden graced with flowing streams, there to remain. How excellent is the reward of those who labour,

M.A.S. Abdel Haleem

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் சொர்க்கங்களிலுள்ள மேல் மாடிகளில் அமர்த்துவோம். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். நற்செயல்கள் செய்தவர்களின் கூலியும் நன்றே.

Abdul Hameed Baqavi

ٱلَّذِينَ صَبَرُوا۟ وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ

those who are steadfast, those who put their trust in their Lord!

M.A.S. Abdel Haleem

உண்மை நம்பிக்கையாளர்கள் (தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக்கொண்டு தங்கள் இறைவனையே நம்பியிருப்பார்கள்.

Abdul Hameed Baqavi

وَكَأَيِّن مِّن دَآبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا ٱللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ ۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

How many are the creatures who do not store their sustenance! God sustains them and you: He alone is the All Hearing, the All Knowing.

M.A.S. Abdel Haleem

உயிர்வாழும் பிராணிகளில் எத்தனையோ இருக்கின்றன. அவை தங்கள் உணவைச் சுமந்து திரிவதில்லை. அவற்றிற்கும் உங்களுக்கும் அல்லாஹ்தான் உணவளிக்கிறான். (இவ்வாறிருக்க அதற்காக நீங்கள் ஏன் அதிகக் கவலைப்பட வேண்டும்.) அவனோ (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.

Abdul Hameed Baqavi

وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ وَسَخَّرَ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ لَيَقُولُنَّ ٱللَّهُ ۖ فَأَنَّىٰ يُؤْفَكُونَ

If you ask the disbelievers who created the heavens and earth and who harnessed the sun and moon, they are sure to say, ‘God.’ Then why do they turn away from Him?

M.A.S. Abdel Haleem

(நபியே! நீர் அவர்களை நோக்கி) “வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? சூரியனையும் சந்திரனையும் தன் திட்டப்படியே நடக்கும்படி செய்தவன் யார்?'' என்று அவர்களைக் கேட்பீராயின் அதற்கவர்கள் ‘‘ அல்லாஹ்தான்'' என்று நிச்சயமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின், அவர்கள் (நம்மைவிட்டு) எங்கு வெருண்டோடுகின்றனர்.

Abdul Hameed Baqavi

ٱللَّهُ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ وَيَقْدِرُ لَهُۥٓ ۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ

It is God who gives abundantly to whichever of His servants He will, and sparingly to whichever He will: He has full knowledge of everything.

M.A.S. Abdel Haleem

அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு அதிகமாகவும் கொடுக்கிறான்; (தான் நாடியவர்களுக்குக்) குறைத்தும் விடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் (மனிதர்களின் தகுதிகள்) அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்.

Abdul Hameed Baqavi

وَلَئِن سَأَلْتَهُم مَّن نَّزَّلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَحْيَا بِهِ ٱلْأَرْضَ مِنۢ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ ٱللَّهُ ۚ قُلِ ٱلْحَمْدُ لِلَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ

If you ask them, ‘Who sends water down from the sky and gives life with it to the earth after it has died?’ they are sure to say, ‘God.’ Say, ‘Praise belongs to God!’ Truly, most of them do not use their reason.

M.A.S. Abdel Haleem

(நபியே! நீர் அவர்களை நோக்கி) மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்பவன் யார்? அதைக் கொண்டு இறந்த பூமியை உயிர்ப்பிப்பவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீராயின் அதற்கவர்கள் ‘‘ நிச்சயமாக அல்லாஹ்தான்'' என்று கூறுவார்கள். அதற்கு, ‘‘ புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!'' என்று நீர் கூறுவீராக. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) உணர்ந்து கொள்வதில்லை.

Abdul Hameed Baqavi

وَمَا هَـٰذِهِ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ إِلَّا لَهْوٌ وَلَعِبٌ ۚ وَإِنَّ ٱلدَّارَ ٱلْـَٔاخِرَةَ لَهِىَ ٱلْحَيَوَانُ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ

The life of this world is merely an amusement and a diversion; the true life is in the Hereafter, if only they knew.

M.A.S. Abdel Haleem

இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டும், வேடிக்கையுமே தவிர வேறொன்றும் இல்லை. மேலும் மறுமையின் வாழ்க்கைதான் நிச்சயமாக நிலையான வாழ்க்கை ஆகும். இதை அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!

Abdul Hameed Baqavi

فَإِذَا رَكِبُوا۟ فِى ٱلْفُلْكِ دَعَوُا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ فَلَمَّا نَجَّىٰهُمْ إِلَى ٱلْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ

Whenever they go on board a ship they call on God, and dedicate their faith to Him alone, but once He has delivered them safely back to land, see how they ascribe partners to Him!

M.A.S. Abdel Haleem

(மனிதர்கள்) கப்பலில் ஏறி (ஆபத்தில் சிக்கி)க் கொண்டால், அவர்கள் முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிபட்டுக் கலப்பற்ற (பரிசுத்த) மனதோடு அவனை அழைத்துப் பிரார்த்தனை செய்கின்றனர். அவன், அவர்களை கரையில் (இறக்கி) பாதுகாத்துக் கொண்ட பின்னர் அவனுக்கு அவர்கள் (பலரை) இணை ஆக்குகின்றனர்.

Abdul Hameed Baqavi

لِيَكْفُرُوا۟ بِمَآ ءَاتَيْنَـٰهُمْ وَلِيَتَمَتَّعُوا۟ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ

Let them show their ingratitude for what We have given them; let them take their enjoyment- soon they will know.

M.A.S. Abdel Haleem

நாம் அவர்களுக்குச் செய்யும் நன்றியை (இவ்வாறு) அவர்கள் மறுத்துக்கொண்டே இருக்கட்டும். (தங்கள் விருப்பப்படியும்) அவர்கள் சுகமனுபவித்துக் கொண்டே இருக்கட்டும். தங்கள் (செயலின்) பலனை(ப் பின்னர்) நிச்சயமாக அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

Abdul Hameed Baqavi

أَوَلَمْ يَرَوْا۟ أَنَّا جَعَلْنَا حَرَمًا ءَامِنًا وَيُتَخَطَّفُ ٱلنَّاسُ مِنْ حَوْلِهِمْ ۚ أَفَبِٱلْبَـٰطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَةِ ٱللَّهِ يَكْفُرُونَ

Can they not see that We have made [them] a secure sanctuary though all around them people are snatched away? Then how can they believe in what is false and deny God’s blessing?

M.A.S. Abdel Haleem

(இந்த மக்காவை) அபயமளிக்கும் புனித இடமாக நாம் ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களைச் சூழவுள்ள மனிதர்கள் (எதிரிகளால்) தாக்கப்படுகின்றனர். இவர்கள் அல்லாஹ்வின் (இந்த) அருட்கொடையை நிராகரித்துவிட்டு பொய்யான தெய்வங்களை நம்பிக்கை கொள்கின்றனரா?

Abdul Hameed Baqavi

وَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِٱلْحَقِّ لَمَّا جَآءَهُۥٓ ۚ أَلَيْسَ فِى جَهَنَّمَ مَثْوًى لِّلْكَـٰفِرِينَ

Who could be more wicked than the person who invents lies about God, or denies the truth when it comes to him? Is Hell not the home for the disbelievers?

M.A.S. Abdel Haleem

அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவனைவிட அல்லது தன்னிடம் வந்த உண்மையைப் பொய்யாக்குபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? இத்தகைய நிராகரிப்பவர்களுக்கு தங்குமிடம் நரகத்தில் இல்லையா?.

Abdul Hameed Baqavi

وَٱلَّذِينَ جَـٰهَدُوا۟ فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ۚ وَإِنَّ ٱللَّهَ لَمَعَ ٱلْمُحْسِنِينَ

But We shall be sure to guide to Our ways those who strive hard for Our cause: God is with those who do good.

M.A.S. Abdel Haleem

எவர்கள் நம் வழியில் (செல்ல) முயற்சிக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நம் (நல்) வழிகளில் செலுத்துகிறோம். நன்மை செய்பவர்களுடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான்.

Abdul Hameed Baqavi

Al-'Ankabut (The Spider) · 69 verses